பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i53

அக்கார்காலக் காட்சிகளைக் காணவும் நாணித் தலை தாழ்த் திக்கொண்டாள்.

தன்னக் காண நாணித் தவைணங்கிக்கொண்ட அவளை, அக்கார்காலம், அந்நிலேயோடு விட்டிலது, கொடுமை மிக்க அது, அவளை மேலும் எள்ளி தகைக்க எண்ணிவிட்டது போலும்; மேலும், அதற்கு அவள் மனேயின் முன்புறத்தில், நாள்தோறும் நீர் வார்த்து அவள் வளர்த்த முல்லைக்கொடி யைத் துணையாகக் கொள்ளவும் திட்டமிட்டது. உடனே, அம்முல்லைக் கொடி நிறைய மெல்லிய அரும்புகளே மலரச் செய்துவிட்டது. அவ்வளவே; முல்லை மனம் மெல்லப் படர்ந்து, அம்மங்கை நல்லாளின் மனதைத் தொட்டு விட்டது. கார்காலத்து மழைதான் வந்து வாட்டுகிறது என்றால், அதற்கு இம்முல்லையும் துணைபுரிகிறதே அதுவும் நாமே வளர்த்த முல்ை துணைபுரிகிறதே; இக்கொடுமையை யாரிடம் கூறி நோவேன் என்ற எண்ணம் எழ, மெல்லத் தலை தூக்கி முல்லைக்கொடியை நோக்கினள். பெண்ணே! என் இளமைப் பருவத்தில், நாள்தோறும் நீர் வார்த்து என்னப் பேணி வளர்த்தவள் நீதான்; ஆனல், மலர்கள் என்ற இம்மா நிதியை நாள் பெற, இன்று துணைபுரிவது இக்கார் காலத்து மழையே; ஆகவே, இப்போது, நான் உன் நலனில் நாட்டம் கொள்வது இயலாது; கார்ப்பருவத்திற்குத் துணைபுரிவதே, இப்போதைய என் கடனம் உலகியல் முறையும் அதுவே: வேண்டுமானல் நீயே எண்ணிப் பார்; உன் இளமை எழில் அளித்த இணையிலா நலத்தை நுகர்ந்து இன்புற்றார் உன் கணவர்; அது ஒரு காலம்; இப்போது அவருக்குப் பொருள் வளத்தின்பால் ஆசை உண்டாகிவிட்டது; அவர்க்கு இப் போது தேவை அது ஒன்றே; ஆகவே, அவர் உன்னே மறந்து. சேணெடும் தூரம் சென்றுவிட்டார்; இக்கார்காலத்தில், உன்னே ஓர் இமைப்பொழுதும் பிரியாது, உன் அண்மையி லேயே வாழ வேண்டிய அவர், எங்குள்ளாரோ? அறிந்து கொள்ளவும் முடியாத இடத்திற்குப் போய்விட்டார்; இது தான் உலகியல். இதை நீ உணர்ந்து கொள்ளவேண்டும்;