பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

பயக்கும் எனின் எனக் கூறி ஒரு வழி காட்டிற்று அவள் உள்ளம்,

அவ்வுள்ளத்தின் உறுதுணைகொண்டு, அப்பெண்ணே அணுகிளுள்; பெண்ணே!: கணவன் உரைத்த சூள் பொய்த்துவிட்டதே அப்பிழையால் அவன் பெருங்கேட் டிற்கு உள்ளாக நேருமே என எண்ணிக் கலங்குகிறது உன் உள்ளம்; அக்கலக்கத்திற்கு இப்போது இடமே இல்லை. பெண்ணே! கார்காலம் இன்னமும் தொடங்கவே இல்லை. பெய்யும் மழை, ஆடும்.மயில், மணக்கும் பிடா இவை அக் காலம் தொடங்கிவிட்டது என்பதை உணர்த்துகின்றனவே; இவற்றைக் கிண்டும் கார்காம்ை தொடங்கவில்லை எனக் கூறு கின்றனேயே என்னே நின் அறியாமை? அவற்றை நீ கண்டி ேையா அல்லது அவற்றைக் காணும் ஆற்றலே உன் கண் ணுெளி இழந்து விட்டதோ’ என்றெல்லாம் கேட்க எண்ணு கிறது உன் உள் உள்ளம்; அதை நான் அறிவேன்; உன் நினைப்பில் பிழையில்லை என்பதும் எனக்குத் தெரியும்; அதைப் போலவே, நான் கூறியதிலும் பிழையில்லை; உன் கண்கள் கார்காலக் கட்சியைத்தான் காணுகின்றன; அது உண்மை, ஆளுல் அக்காட்சி நிகழ்ந்தது எவ்வாறு என்பதை உன் உணர்வு அறியாது’ அதை நான் அறிவேன்; கூறுகிறேன் கேள். கடந்த ஆண்டு கார்காலத்தின்போது, நிறைய நீர் குடித்து எழுந்த மேகத்தினிடத்தில், அந்த ஆண்டில் பெய்தது போக, அப்பருவ முடிவில் சிறிது நீர் நின்றுவிட்டது; அந் நீரை, இதுகாறும் சுமந்து திரிந்தது அம்மேகம். இப்போது சார் காலம் தொடங்கப் போகிறது; அக்காலத்தில் பெரு மழை பெய்வதற்கு வேண்டிய நீரால் தன்னை நிறைத்துக் கொள்ளவேண்டும் என நினைத்தது அம்மேகம்; அந்நினே வோடு கடல் நீரை நோக்கிப் புறப்பட்ட அது போகும் வழி யில் தன்பால் உள்ள அப்பழைய நீரைப் பெய்து ஒழித்துவிட எண்ணிற்று; அவ்வாறே பெய்துவிட்டது. அம்மழைதான் இப்பொழுது நீ கண்ட மழை; ஆனல் இம்மழை வந்தவகை, மயில்களுக்குத் தெரியாது. மழை பெய்யும் காலமெல்லாம்