பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கார்காலம் எனக் கருதும் மடமையுடையன அம்மயில்கள்; அதஞல் இதையும் கார்காலம் என்றே கருதிவிட்டன; அவ் வறியாமையால் தோகைவிரித்து ஆடவும் தொடங்கிவிட் டன; மயில்கள் ஆடக்கண்ட பிடாவும் மலரத் தொடங்கி விட்டது; தன்னினும் மிக்க அறிவு வாய்ந்த மயிலே கார் காலம் என மயங்கிவிட்டது என்றால், பிடா மயங்கியதில் வியப்பில்லையன்றாே? ஆகவே, இவை யனைத்தும் மயிலின் மடமையின் விளைவே யல்லது வேறு இல்லை; உன் கணவன் உரை ஒருபோதும் பொய்த்ததில்லை; இப்போதும் பொய்க்க வில்லை இனிப் பொய்க்கப் போவதும் இல்லை. இது கார் காலம் அன்று; வாக்களித்தவாறே அவர் கார்காலத்தில் வந்து சேருவர்; கலங்காதே’ என்று கூறி அவள் கவலையை மாற்றிக் கண் ணிரைத் துடைத்தாள்.

“மடவ, வாழி! மஞ்ஞை மாயினம்;

காலமாரி பெய்தென, அதன் எதிர் ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன; கார் அன்று இகுளே! தீர்க கின்படரே! கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர் புதுநீர் கொளீஇய உத்குதரும் நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.” a

காணும் காட்சிகள் கனவோ?

கார்காலம் தொடங்கிவிட்டது என்பதை இயற்கை நிகழ்ச்சிகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன; அங்ஙன மாகவும், தோழி, இது கார்காலம் அன்று; மயில்களின் ஆறி யாமையின் விகளவு எனக் கூறுகிருள்; என்னே அவள் அறி

குறுந்தொகை : 251 இடைக்காலஞர்.

பெய்தென.பெய்ததாகக் கருதி, ஆல்ல.ஆடி மகிழ்தல்; படர்-துன்பம், கழிந்த மாரி.கடந்துபோன கார்காலம்; உகுத்தரும்-சொரியும்; நொதுமல்.கார்காலத்திற்கு உரிய . தல்லாத,