பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அன்று என்ற உன் பிடிவாதம் இவற்றைக் கண்டும் அகல வில்லையாயின், இப்போது நம் முன் நாம் காணும் இக்காட்சி கள் எல்லாம் கனவு தாமோ? கொன்றை மலர்வதும் குருந்து மணப்பதும் கனவில் நிகழ்வதைாமோ? தோழி! ஏன் உன் வாயடைத்துப் போய்விட்டது? இப்போதாவது கூறு! கணவன் கூறிச் சென்ற கார்காலம் இன்னமும் பிறக்க வில்லையோ?” எனக் கண்களில் நீர் கலங்கிக் கேள்விமேல் கேள்விகளாகக் கேட்டுக் கலங்கிக் கருத்திழந்தாள்.

“செல்வச் சிருஅர் சீறடிப் பொலிந்த

தவளை வாய பொலம் செய் கிண்கிணிக் காசின் அன்ன போது ஈன் கொன்றை குருந்தோடு அலம் வரும் பெருங் தண் காலையும் கார் அன்று என்றி யாயின் கனவோ மற்று இது? வினவுவல் யானே. ,

துயர் தரும் மாலே அவர் சென்ற நாட்டில்

இல்லையோ?

ஒரு நாள் மா ைவழக்கம்போல், காதலன் வருகையை எதிர்நோக்கி மனையின் முன்வாயிலை அடைந்து காத்திருந் தான்; அந்நிலையில் கணவன் மீது சென்றிருந்த அவன் கருத்தைக் கவரும் நிகழ்ச்சியொன்று ஆங்கு நிகழ்ந்தது; கணவன் வாராமையால் தான் உற்ற கலக்கத்தையும் மறந்து அந்நிகழ்ச்சியைக் கண்ணுற்று நின்றாள். அவள் வீட்டின் இறப்பில் கூடு கட்டி வாழ்ந்திருந்தது ஒரு குருவி; காயிைல் மலர்ந்து மாயிைல் வாடிய ஆம்பல் பூவின் புற இதழ் போலும் நிறமும் உருவமும் வாய்ந்து காண்பதற்கு அழ

a குறுந்தொகை : 148. இளங்கீரந்தையார்.

சீறடி.சிறிய கால்கள்; பொலிந்த-விளங்கிய; தவளை வாய.தவளையின் வாய் போலும் வாயை உடைய; பொலம். பொன்; காசு. அணி; போது.மலரும் பருவத்தை உடைய அரும்பு ஈன்-அரும்பு விட்ட அலம் வரும்-அசையும்.