பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

நறிய கல்லோள் மேனி, முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே.'a அழகி, ஆணுல் அடைதற்கு அரியாள் :

அவள் நல்ல அழகி, நற்பண்பும் உடையாள் என அறிந்து அவள்பால் காதல் கொண்ட இளைஞன், அவள் கிடைத்தற்கு அரியள் என்பதை அறிந்திலன்; அவளை அண்மையில் சென்று காண்பதோ, அவள் அன்பைப் பெறுவதோ அவ்வளவு எளிதில் இயலாது; அவள் அவ்வூர்த் தலைவன் மகள்; மகப் பேறின்றி வருந்திய அவன், ஆரிய தவம் பல ஆற்றிப் பெற்ற ஒரே மகள்; அதனல் அவளைக் கண்ணிமைபோல் காத்து வந்தான்; மேலும் அவள் வீடு, அரிய காவல் உடையது; அக் காவனக் கடந்து சென்று, அவளைக் காண்பது எளிதில் இயலாது; காவலைக் கடந்து உட்புகினும், அவளோடு பேசிப் பழகுதல் இயலாது; அவளைப் பெற்றதாயும், பேணி வளர்த்த செவிலியும் அவளே இமைப்பொழுதும் பிரியாது, அவளுட னேயே இருப்பர்; வீட்டைவிட்டு வெளிவரும் அவளை, அவள் விளையாட்டுத் தோழியர் சூழ்ந்து கிடப்பராதலின், அவளைத் தனித்துக் காண்பது அந்நிலையிலும் இயலாது. இத்தனைக்கும் மேலாக, அவள் வனப்பும், அவள் பெற்றாேர் வாழும் மிக மிக உயர்ந்தனவாமாதலின், அவளை, அவள் பெற்றாேர் தம்மையொத்த வளமார்குடியில் வந்தோனுக்கே மணம் செய்து தர இசைவர். -

இதையெல்லாம் உணராது, இளைஞன் உள்ளம், அவள் பால் சென்றுவிட்டது; அவள் அன்பைப் பெற்று, இன்புற்று வாழத்துடித்தது; அத்துடிப்பின் மிகுதியால், அவன் நனிமிக

2 குறுந்தொகை : 62. சிறைககுடியாந்தையார். கோடல்-காந்தள்; எதிர் தோன்றிய வீ.மலர்; முகை. அரும்பு நாறு-மணம் வீசும் விரை இ-கலந்து ஐது-அழகாக, தொடைமாண்ட - மாட்சிமைப்படத் தொடுக்கப்பெற்ற: கோதை-மாலை முறி-மாந்தளிர் வாய்வது-நிறமும் மென்மை யும் வாய்ந்தது முயங்கற்கு-தழுவுதற்கு.

கு-2