பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#71

காதலியின், அண்ணிர் சொரியும் கலங்கிய முகத்தைக் காணமாட்டாது கலங்கிய உள்ளத்தால் உணர்விழந்து போன இளைஞன், தேர் ஒட்டம் நிற்கவே கண்விழித்து நோக்கிஞன். மனேயையும், அம்மனை வாயிலில் தன் வரவை எதிர்நோக்கி நிற்கும் மனைவியையும் கண்ணெதிரே கண் டிான்; எப்படி வந்து சேர்ந்தோம் என வியந்தான்; அவ் வியப்புணர்ச்சியோடு தேர் வந்த வழியைத் திரும்பி நோக் கினன்; புது வழி புலப்பட்டது அவன் கண்களில். கல்லும் கட்டா நீ தரையும் பிளந்து போகப் புழுதிப் படலம் படர்ந்து தோன்றும் அப்புது வழியைக் கண்டான்; தேரை விட்டுக் குதித்தான்; தன் வருகைக்காகத் தவம் கிடக்கும் மனேவியை மறந்து, குதிரைகளின் வார் பிடித்து நிற்கும் தேரிப்பாகனத் தழுவிக்கொண்டான். அன்புடைப்பாக என் உள்ளம் அறிந்து-என் உள்ளத் துடிப்பை உணர்ந்து புது வழி கண்டு விரைந்து வந்து ஈங்கு நிறுத்தியது நின் தேரை அன்று. நான் வாராமையால் வருந்தி, இழந்து போன என் காதலியின் உயிரை அன்றாே நீ எனக்குத் தந்தனை; உன் அன்பை என் னென்பேன்! உன் அறிவை எவ்வாறு புகழ்வேன்!” எனக் கூறிப் பாகனே நாவாரப் பாராட்டி, அவன் நெடிது வாழ வாழ்த்தின்ை. அக்காட்சியைக் கண்டாள் அவள்; அவள் கவலை ஒழிந்தது. அளிப்புக் கடலில் ஆழ்ந்துபோளுள்.

சேயாறு செல்லா மாயின் இடர் இன்று களைகலம் காமம் பெருந்தோட்கு என்று நன்று புரிந்து எண்ணிய மனத்தை யாகி முரம்பு கண்ணுடைய ஏகிக், கரம்பைப் புதுவழிப் படுத்த மதியுடை வலவோய்! இன்று தந்தன தேரோ? நோய் உழந்து உறைவியை நல்க லானே.” a

a குறுந்தொகை 400. பேயனர். சேயாறு-நெடுந்துாரம்; இடர் இன்று-துன்பம் இல்லா மல்; களை கலம்-போக்கமாட்டோம்; பெருந்தோட்கு-பெருந்