பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f; ;

வானமே பெருமழை பெய்து வாழ்க

இளைஞன் வாழ்க்கைக்கு வேண்டும் வற்றாப் பெரும் பொருளோடு வந்துவிட்டான்; இனி அவனுக்கும் அவளுக்கும் எவ்விதக் குறைபாடும் இல்;ை இயல்பாகவே அறவுள்ளம் வாய்க்கப்பெற்றவர்கள் அவர்கள். இப்போது தங்கள் இல்லற வாழ்க்கை இனிது நடைபெறுவதற்கு-வருவிருந்து ஒம்பும் வாழ்க்கை நெறியில் வாட்டம் இன்றிச் செல்வதற்கு வேண்டிய பெரும்பொருள் வந்து சேர்ந்துவிட்டது. அதனுல் இன்ப நுகர்விற்கு இருந்த பொருள்வயின் பிரிதலாகிய ஒரு தடையும் இல்லாமல் போய்விடவே, அவர்கள் இன்ப வுலகில் இடையூறின்றி உலாவினர்.

இவ்வாறு அறம் பொருள் இன்பம் என்ற மூன்றாலும் நிறைந்த பெருவாழ்வு பெற்றமையால் அவர்கள் பெருமிதம் கொண்டனர்; அவன் வீடு திரும்பிய அன்று அவள் கணவன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியால் அதுகாறும் வாரி முடிக் காத தன் கூந்தலைக் கண்டோர் வியக்குமாறு முடித்துக் கொண்டாள். குவளை மலர்களைக் கொய்து வந்து கொத்துக் கொத்தாகச் சூடிக்கொண்டாள்; அழகையும் அரிய மனத் தையும் அள்ளிச் செர்ரிந்தது அவள் கூந்தல், இரவு வந்தது. இருவரும் பள்ளி புக்கனர்; பஞ்சணையை வெறுத்து, அவள் கூந்தலில் த ைவைத்து உறங்குவதில் இணையிலா இன்பம் கண்டான் இளைஞன்.

இருவர் உள்ளமும் நிறைந்திருந்தன; அதற்கு மேலாக அன்றைய அவள் தோற்றம் அவன இன்ப உலகிற்கே

தோளுடைய மனைவிக்கு; புரிந்து-விரும்பி; முரம் பு-மேட்டு நிலம்; கண் உடைய-பிளவுண்டுபோக, கரம்பை.கரம்பு நிலத்தில், தேரோதத்தனை எனமாற்று உறைவியைவாழ்பவளே, . - -