பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

அக்கிளேயில் இருந்த கனி, தானே காம்பற்றுக் குளத்து நீரில் வீழ்ந்துவிட்டது; தன் வாழிடத்தில் வந்து வீழ்ந்ததை வாளே தின்றுவிட்டது; இதில் வாளையைப் பழிப்பதில் பயன் உண்டோ? மாமரத்தை வாளே வாழும் நீர் நிலைக்கரையில் வளரவிட்டது ஒரு தவறு; அம்மரத்தின் கிளைகளில் ஒன்று நீர் நி ைநோக்கி நீளத் தொடங்கிய போதே, அதைக் கரை நோக்கி மடக்கி விடாது விட்டது இன்னொரு தவறு, அக்கிளை யில் கனிகள் பழுக்கத் தொடங்கியதும், அவற்றை அருகி ருந்து பக்குவம் அறிந்து பறித்துக் கொள்ளாது விட்டது பிறி தொறு தவறு; இவ்வாறு தவறு மேல் தவறு செய்துவிட்டுப் பின்னர், வலியச் சென்று பறித்து உண்ணுது, வாயில் வந்து வீழ்வது போன், தன் வாழிடத்தில் வீழ்ந்த கனியை உண்ட வாளையைப் பழித்தால், அவ்வாறு பழிக்கும் அம்மரத்திற்கு உரியோர்க்கு அறிவுண்டென யாரேனும் கருதுவரோ? அவர் அறியாமை கண்டு நகைப்பதல்லது, அவ்வாளேதான் அது குறித்து வருந்துமோ?

தோழி! வாளை விழுங்கிவிட்டது என் மரத்து மாங் கனியை என வருந்துவார்க்கும், பரத்தை என் கணவனே வயமாக்கிக்கொண்டாளே என அப்பெண் வருந்துவதற் கும். ஏதேனும் வேறுபாடு உண்டோ? தோழி! அவள் நம்மை புலப்பது கண்டு நாம் வருந்தத் தேவையில்லை. அறியாமை யால் அவள் ஆவ்வாறு பழிக்கிருள். வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கிடந்து கிடந்து அவள் அவ்வாறு ஆகிவிட் டாள்; ஆகவே அவளைக் குறைகூறுவதில் பயன்இல் .ெ அவள் நினைப்பதுபோல், நாம் நெஞ்சாரப் பிழை புரிந்திருந்தால், நம் கண்முன் நின்று களிநடம் புரியும் இக்கடற்கன்னி தம் மைக் கெடுத்து அழிக்கட்டும்.’’ என இவ்வாறு கூறி முடித் தாள்.

கணக்கோட்டு வாளைக் கமஞ்சூல் மடகாகு

துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம்

தொன்றுமுதிர் வேளிர் குன்றுார்க் குளுது

தண்பெரும் பவ்வம் அணங்குக, தோழி!