பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

இளைஞன் இனியணுதல் நின் அளவில் மட்டுமோ?

கணவனின் தகாலொழுக்கத் கால் உள்ளத்தில் துயா மிசினும், தன் துயர் அறிந்து ஊரார் அவனைப் பழிப்பதற்கு அஞ்சி, அதைத் தன் அகத்தே அடக்கி, அவள் வாழ்ந்திருந் தாள். நாட்கள் சில கழிந்தன. பாத்தை வீடு போயிருந்த இளைஞன் உள்ளம், அப்பாத்தை தரும் இன்.த்தில் வெறுப் புற்றமையாலும், மனையில் மனைவி மகவின்று மாண்புற்றனள்

என்ற செய்தியை அறிந்தமையாலும் வீட்டிற்கு வர விரும் பினன் அவன். ஆளுல் தகாவொழுக்கம் மேற்கொண்டு அவன் செய்த ஆவது ஆன் உன்னத்தை உறுத்திற்று என் தவறு கண்டு அவள் எவ்வளவு வருந்தியிருப்பள்; என்பால் அவள் வெறுப்புற்றிரும்:ள் என்ற எண்ணம் எழ:ே, அவன் நெஞ்சு, மனே புகுந்து மனேவியைக் காண நடுங்கிற்று. அதனல் ஆண்டுச் செல்வதன் முன் அவள் நலத்திலும் தன் நலத்திலும் ஒருங்கே ஆர்வம் காட்டும் சிலரை அவள்பால் அனுப்பி அவள் சினத்தைப் போக்குதல் நலமாம் என எண்ணினன்; பாணன் ஒருவனே அழைத்து மனைவி.ால் தூது அனுப்பினன்.

இளைஞன் மனே புகுந்த பாணன், ஆங்கு அப்பெண்ணின் நிலையினைக் கண்டான்; கணவன்:ால் கொண்டுள்ள சினத்தின் கடுமையை அவள் முகத்தோற்றத்தில் கண்டு அவளை அணுக அஞ்சிஞள். ஆதனுல் அவன் தோழி:ால் மெல்லச் சென்றான். வந்த செய்தியைக் கூறினன். மனைவியை மறந்து பரத்தை பின் திரியும் இளைஞன் கொடுஞ்செயலை எடுத்துக் காட்டி இடித்துர்ைத்தாள் அவள். அது கேட்ட பாணன், ‘தோழி! இளைஞன் நீங்கள் கருதுமாறு கொடியவனல்லன்; இவ்வூர் வாழ் மக்கள் அனைவரினும் அவன் இனிமைப் பண்பை தனி மிகப் பெற்றுளான்; அவன் உள்ளம் என்றும் இனியவே எண்ணும்; அவன் நாக்கு என்றும் இனியவே கூறும்; எப்பொ ழுதும் அவன் இனியவே செய்வன்; இவ்வாறு எல்லோர்க்கும் இனியயை அவன், இவளிடத்து மட்டும் அன்பு குறைந்து விடுவனே தோழி, இவள் பால் அவன் காட்டும் அன்பிற்கு அளவு காணல் அரிதினும் அரிதாம். அத்துணேப் பேரன்பு