பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாள் என்பதைமட்டும் கொண்டு, என்னிலை மறந்து அவள் பால் காதல் கொள்வதோ, அவள் சாதலைப் பெறமாட்டா மையால் கண்ணிர் சொரிந்து கலங்குவதோ அறிவுடைமை யாகாது; இதையெல்லாம் அறியாது வருந்துகிறது என் மட நெஞ்சம்; ஏ நெஞ்சே! என்னே நின் மடமை! அவள் அரியள் என்பதை அறியாது, அவள் நல்லள்; அவள் நல்லள் எனக் கூறி வருந்துவது ஏனுே?’ எனக் கூறி வருந்தினன் இளைஞன்.

‘ குணகடல் திரையது பறைதயு நாரை,

திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை அயிரை ஆரிரைக்கு அஞ்வந்தாங்குச் சேயன், அரியோள் படர்தி, நோயை நெஞ்சே! நோய்ப் பாலோயே;"a

அம்மட்டோ இன்பத்தின் இயல்புணர்ந்தவன் இளை ஞன். மெய் வாய் கண் மூக்கு காது என்ற ஐம்பொறிகளுள் எது இன்பத்தை விரும்பினும், அது பொருளின் துணையின்றி இயலாது. பணம் இல்லாதவன் பிணம் என்பர் உலகோரி. எவ்வின்பத்தையும் பிணத்தால் நுகர முடியாது. அதைப் போல் இன்பத்தை நுகர்வது பணம் இல்லாதவனலும் இயலாது. இன்ப நுகர்வு பொருளின் துணையின்றி இயலாது என்பதை, பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்’, வறிய வ ைஇளமைபோல் வாடி’, பொருள் இலான் இளமைபோல்

குறுந்தொகை : 128. பரணர்,

குணகடல்-கிழக்குக் கடல்; திரையது.அவீைசும் கரைக் கண் வாழ்வது; பறை தபு-பறக்கும் சிறகு இழந்தது; பொறையன்.சேரனுக்குரிய, ஆசிரை-ஆரிய உணவு அன. வந்தாங்கு. ஆசையால் தலைதுாக்கிக் கிடந்ததுபோல்; படர்தி-பெற நினைந்தாய், நோய்ப் பாலோய்-துன்பம் தரும் தவின உடையாய்,