பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

zou

பாக அனைத்துக்கொண்டிருப்பதால் அக்கணவல் முன்னிை யில் சென்று நிற்க அஞ்சிற்று. அதனல் அவள் புறத்தே சென்றுள்; இன்ப உணர்வைத் தட்டி எழுப்பு:ாறு அவன் தோளைத் தழுவி நின்றாள். அந்நிலையில் அவர்கள் மெய் மறந்து போயினர்.

கணவனும் மனைவியும் நிலாமுற்றத்திற்குச் சென்றுள்

ளனர் என்பதை அறியாமையாலோ, அல்லது அறிந்தும், ஆங்கு அவர்க்கு ஆற்ற வேண்டிய சில பணிகள் இருந்தமை யாலோ, ஆங்கு வந்த தோழியும், அவளைத் தொடர்ந்து வந்த பாணனும் அவ்வின்பக் காட்சியைக் கண்டனர். ‘பிழை புரிந்த கணவன் தன் பிழையுணர்ந்துகொண்டான்; ஆகவே அவன் பிழை பொறுத்த ஏற்றுக்கொள்வதே பண்புடைமை யாம்’ எனத் தாங்கள் பலகால் அறிவுரை கூறவும் ஏற்றுக் கொள்ள மறுத்து மனத்துயரில் மூழ்கிக் கிடந்தவள், இன்று இளைஞனைத் தழுவி நிற்கும் இக்காட்சியை என்னென்போம்; இத்தகைய பேரன்புடைபாளைப் பிரியத் துணிந்த வன் னெஞ்சு வாய்த்தவன் இவன், இப்போதாவது தன் பிழை ஒழிந்து வந்து சேர்ந்தனனே; இவ்விருவரும் பண்டுபோல் மீண்டும் இன்புற்று வாழும் இவ்வின்பக் காட்சியைக் காண நம் உள்ளம் எவ்வளவு துடித்தது; நாம் அதற்கு எத்துசீனப் பtடுபட்டோம்; அது இன்று வாய்த்தது; பண்பு மிக்க பெரு வாழ்வு பெற்றுவிட்டனர். இவர்கள்; வாழ்க இவ்வின்பச் சூழ் நிலை’ எனத் தம் உள்ளம் வாழ்த்த, விழித்த விழி இமைக்காது சிறிது இருந்து நோக்கி இன்புற்றனர்.

‘கண்டிசின் பான! பண்புடைத்து அம்ம;

மாலை விரிந்த பசுவெண் ணிலவில்,

குறுங்கால் கட்டில் கறும் பூஞ்சேக்கைப்

பள்ளி யானையின் உயிர்த்தனன், கசையின்

புதல்வன் தழி இயினன் விறலவன்:

புதல்வன்தாய் அவன்புறம் கவை இயினளே ‘ .

a குறுந்தொகை : 359. பேயனுர்,