பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

திருத்துவதே நட்பிற்கு அழகு எனும் நட்பின் இலக்கணம் அறிந்தவன் அந் நண்பன்; அதல்ை இளைஞனே அருகில் அழைத்து, ஆருயிர் நண்ப! காதல், கண்டாரை வருத்தும் கொடுமையுடையது என்றும், காதல் துயர் விளக்கும் தீமை யுடையது என்றும் கூறுவார் அறிவற்றவராவர்; காதலுக்கு அப்பண்பு இல்லை; உண்மையைக் கூற வேண்டுமாயின், காதல் என்பதொரு பொருளே உலகத்தில் இல்லை; காதல் அவரவர் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சியின் விளைவே; காதலென ஒரு பொருள் உண்டு என உணர்வார்க்கு, அது தோன்றித் துயர்தரும்; அவ்வியல்புடைப் பொருள் எதுவும் உலகத்தில் இல்லை என உணர்வார்க்கு, அக்காதலால் துயர் உண்டாதல் இல்லை; நண்பt பற்களெல்லாம் தேய்ந்துபோன ஒரு கிழமாட்டினல், நிலத்தில் சிறிதே தலைகாட்டி நிற்கும் இளம்புல்லைக் கடித்துத் தின்ன இயலாது எனினும், அது. அப்புல்லை நாவால் தடவிப் பார்த்தாயினும் இன்புற எண்ணும். புல்லைத் தின்ன இயலாத அது, அப்புல்ல நாவால் நக்குவதையே அப்புல்லைத் தின்றாற்போல் கருதிச் சுவைத்து மகிழும்; அதைப் போவே, மக்களில் ஒருசிலர்: காதல் என ஒரு பொருள் இருப்பதாக எண்ணி, அக்காத லால் துயர் உறுதல்போல் தளர்ந்து மெலிவர்; இதுவே காதலின் இயல்பு; ஆகவே நண்ப காதல் என்பதொரு பொருள் உலகில் இல்;ை அது அவரவர் கருத்தின் திரியே. கலங்கா உள்ளம் உடையார், அக்கற்பனையால் கலங்குவ தில்லை; உண்மை இதுவாகவும், காதல் எனும் அக் கற்பனை” பொருளைக்கண்டு கலங்குவது நின் பேராண்மைக்கு அ9 கன்று’ என அன்பு கலந்த அறவுரையின, இனிமையாக எடுத்துக் கூறிஞன். -

நண்பன், காதல் ஒரு கற்பனை; அக்காதலால் கலங்கு வது அறியாமை” எனக் கடிந்துரைப்பது கேட்ட இளைஞன்,

காமம் காமம் என்ப; காமம் அணங்கும் பிணியும் அன்றே; கினைப்பின் முதைச் சுவல் கலித்த முற்றா இளம்புல்