பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

யும், அவன் யார்? தன் தோழியை மணந்து வாழத் தக்க மாண்புடையன்தான என்பதையும் அறிந்துகொள்ள விரும் பினுள்; அதனல், அவர் காதலுறவை அறிந்தும், அறியா தாள்போல் நடந்து கொண்டாள்; அதனல், இளைஞன் கூறி யனவற்றைக் கேட்டும் கேளாதாள்போல் போய்விட்டாள்; ஆனல், அவன் அவளே விட்டிலன்; மறுநாளும் கண்டு குறை கூறி நின்றன்; அன்றும், அவள் வாய் திறந்து விடையளித் திலள்; அவனும் விட்டானல்லன்; அவன் உறுதிப்பாடு கண்ட அவள், ஒருநாள், நீ கூறும் பெண், நனி மிக இளையவள்” என்றும், பிறிதொரு நாள், அவள் பெற்றாேர் கொடியவர்: அதல்ை அவளை அடைதல் அவ்வளவு எளிதன்று’ என்றும், மற்றாெரு நாள், ‘நீ மிக உயர்ந்த குடியில் பிறந்தவன்; ஆதலின இவள் உனக்கு ஏற்றவள் அல்லள்’ என்றும், இவ்வாறே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொய்க்காரணம் கூறி, அவன் வேண்டுகோளை மறுத்து வந்தாள்.

இளைஞன் பொறுமை இழந்தான்; தோழியை வெறுத் தான்; வெறுத்த அவன் வாயினின்றும் வெடித்தன. சில கடும் சொற்கள்; அவளே நோக்காது, எதையோ நோக்கி யிருந்து, அவள் கேட்குமாறு, ‘மூங்கில் போலும் பருமையும் மென்மையும் வாய்ந்த தோள்களையுடைய அவ்விளையாள் விரும்பினுளாக, நான் அவளுக்குப் பாவை பண்ணி அளித் தேன்; அப்பாவை பன்ன உதவும் பஞ்சாய்க் கோரையைத் தேடி, நீர் நிறைந்துவழியும் பள்ளங்களில் அலைந்தேன்; தொய்யில் குழம்பால், அவள் மார்பில் அழகிய ஓவியம். பல வரைந்தேன்; அவளேக் காக்கும் கடமைபூண்டு, இரவு பக லாக, இமைப் பொழுதும் பிரியாதிருந்து காத்து நிற்பார் எவரும், இவற்றுள் எதையும் அறிந்திலர்; எம் இருவர்க்கு மிடையே உண்டான அவ்வுறவு,அவ்வளவு பெருகி வளரவும், அதைச் சிறிதும் அறிந்துகொள்ளாத இவர் காவல் நனிமிக) நன்று அத்தகையார், இன்று நான் அவர் துணை வேண்டி நின்றால், அதை ஏற்றுத் துணையுரிய விரும்பாது, என்ன விரட்டுகின்றனர்! என்னே இவர் அறியாமை இந்நாடாளும்