பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 .


மிகுதியால் மறந்துபோன அதை உணர்ந்துகொண்டிதும், காதலன் பொருள் தேடிவரப் போய்விட்டமை கண்டு கலங் குவதைக் கைவிட்டாள். அவன் கருதியவாறே பிரிந்து போய்ப் பொருள் ஈட்டுக. போனவன் அவன் வேண்டும் போது வந்து வரைந்துகொள்க. பிரியக் கருதியவனைப்போப் வருக எனப் ப்ோக்கி, அவன் வந்து வரையுங்காறும், அவன் வரவினை எதிர்நோக்கிக் காத்துக் கிடப்பேன் நான். அதை விடுத்துப்போகக் கருதுவாகனப்போகற்க,எனத் தடுப்பதோ, என்னைவிட்டுப்பிரிந்தவழிக் கலங்குவதோ,பொருளீட்டிவந்து பின்னர் வரையக் கருதுவான இன்னே வரைந்துகொள்க என வற்புறுத்துவதோ செய்யேன்; அது மனேவியர்க்கு மாண்பளிக்காது என்ற நல்லுணர்வு வரப்பெற்றாள். அவ்வுணர்வு வரப்பெற்ற அவள், காதலன் பிரியின் இவள் துயர் பெரிதாமே; அதை இவள் எவ்வாறு தாங்கிக்கொள் வாள்; அவனைப் பிரிய விடுத்து இவள் உயிர் வாழ்வளோ?” எனும் கவ ைவருத்த, தன் பொருட்டுவருந்தி நிற்கும் தோழி பால் சென்றாள். கவலை தோய்ந்த அவள் முகத்தைக் கன் டாள்; தோழி! நெருஞ்சி மலரை நீ பார்த்துள்ளனயன்றாே? ஞாயிறு கீழ்த் திசையில் தோன்றும் காணப்பொழுதில், அது அக்கிழக்கு முகமே நோக்கி மலரும்; ஞாயிறு உச்சியை அடையும் நண்பகற் பொழுதில்,அது வானத்தை அண்ணுந்து கிடக்கும்; ஞாயிறு மறையும் அந்திப் பொழுதில், அது மேற்கு முகம் நோக்கும். இவ்வாறு, ஞாயிறு தோன்றி மறை யுங்காறும் அது செல்லும் திசைதோறும் திரும்பி அதையே நோக்கிக் கிடப்பதை நீ கண்டுள்ளனயன்றாே தோழி! அந் நெருஞ்சி மலர்போன்றவள் நான்; என் உள்ளமலரை மலர் விக்கும் ஞாயிறு நம் காதலன். அவன் கருதுவதையே கருதும் என் உள்ளம். என்னைவிட்டுப்போன அவன் கொடுமை கண்டு அது கலங்காது. அவன் கருத்து அது வாதல் அறிந்து, அதற்குத் தானும் உடன்பம்டு அடங்கி ஆற்றியிருக்கும். காயிைல் தான் மலரத் துணைபுரிந்த ஞாயிற்று வெப்பம், மாலையில் தன்னை வாட்டச் செய்யும் என்பதை அறிந்தும், நெருஞ்சி அதன்பின் திரிவதுபோல்