பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



இன்பம் தருவான் எனும் நம்பிக்கையால் உயிர்கொண்டு வாழ்ந்த அவள் நம்பிக்கையும் நாளடைவில் தளர்ந்து விட்டது. அவன் வாராதே நின்று விடுவனே எனும் ஐயம், அவள் உள்ளத்தில் மெல்ல இடம்பெறத் தொடங்கிற்று. அதனல் அவள் உள்ளம் அஞ்சிற்று கண்டு காதல் கொண்டு, அன்பு காட்டிப், பிரியேன்; பிரியின் உயிர் வாழேன்” என வன்புரை வழங்கிய அவன், தன்னைக் கைவிட்டால் தன்நிலை என்னும் என எண்ணி நடுங்கிற்று அவள் உள்ளம். “தன் காதலைப் பொய்க்கும் கள்வஞய், கயவளுய் அவன் மாறி விடின், அவன் செய்த கொடுமையை ஆன்றாேt அவையில் எடுத்துக் கூறி அறம் கேட்க எண்ணின், அந்நிலையில் தனக்குச் சான்று கூறித் துணைபுரியும் நல்லவர் எவரும் இலரே இதற்கு என் செய்வேன்” எனக் கலங்கினுள்,

அவ்வாறு கலங்கியவள், கலங்கி வாளாக் கிடிப்பதால் பயன் இல்லை; தோழியால் கூறி இதற்கு ஒரு வழி காணுதல் வேண்டும் எனக் கருதினுள்; தோழியை அழைத்தாள். தோழி! காதலர் என்னை முதன் முதலாகக் கண்டு காதல் கொண்டபோது, அங்கு வேறு யாரும் இல்.ை அங்கு இருந் தவர், என் உளம் கவர்ந்த கள்வராய அவர் ஒருவரே; என் காதல் உறவிற்குச் சான்று பகர வல்லவர், அவர் ஒருவரைத் தவிர வேறு எவரும் இல்லை. நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகே உள்ள ஒரு நீர்நீயிைல் நாரை ஒன்று இருந்தது; ஆனல், அதுவும் நாங்கள் உறவு கொண்டதைப் பார்க்க வில்லை. தன் உணவைத் தேடும் கருத்தால், ஆரல்மீன் ஓடி வராதா என அந்நீரையே நோக்கிக் கொண்டிருந்தது அது. அதனல், அது எங்கள் உறவினே அறியும் சான்றாகாது, தோழி! வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் அந்நிை யில், அந்நிகழ்ச்சிக்குச் சான்றளிக்கவல்ல சான்றாேர் சிலர் உடன் இருத்தல் வேண்டும் என்பதை, நான் அப்போது அறியாது போனேன். இரைதேடும் ஆர்வ மிகுதியால், தனக்கு ஊறு தேடுவார் எவரேனும் வருவரே எனும் எண் ணம் அற்று, அதனுல், அது வாழும் நீர்நிலைக்கு அணித்தாக,