பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



தன் னேந்த முகம் கண்டு சிறிதும் வருந்தாது. மாருகச் சிறிதே முறுவல் தோன்ற மலர்ந்த முகத்தோடு மகிழ்ந்திருக் கும் தோழியை அணுகி, பதோழி! நம் காதலர்க்குரிய மை நாட்டில், அந்நாட்டு விலங்குகளும் மனம் நிறைந்த வாழ்வு பெற்று வாழும்; அத்தகைய மாண்புடையது அவன் மலைநாடு’ எனப் பலரும் பாராட்டிக் கூறுகின்றனர். அவன் நாட்டு மலைகளில் வருடை எனும் ஒருவகை மான் வாழ்கின்றதாம். அதன் குட்டி, தன் தாய் மடியினின்றும் பெருக்கெடுத்துப் பாயும் பாலை வயிருர உண்டு மகிழ்ந்து, மர நிழலில் துள்ளி விளையாடுமாம். தோழி! அதை ஏன் இப்பொழுது கூறு கிறேன் என்றால், இவ்வாறு மனம் நிறைந்த வாழ்வு பெற்று மகிழ்ந்து ஆடும் விலங்கினங்கள் வாழ்தற்கிடமாய நல்ல நாட்டில் பிறந்த அவரும், நாம் விரும்புமாறு, வேண்டிய பொருளோடு விரைவில் வந்து, நம்மை மணம் செய்து கொண்டு மகிழ்ச்சி அளிப்பர் என்பதை நான் அறிந்து கொண்டதை உனக்கு அறிவித்தற்கே ஆகும். தோழி! அவர் உள்ளம் அசைக்க முடியாத உறுதிப்பாடுடையது. எத்தகைய இடர்ப்பாடு வரினும்,தான் கூறிய உறுதிப்பாட்டில் தளராது நிலத்து நிற்கவல்ல உரம் வாய்ந்தது. மலை கலங்கினும் கலங்கும், அவர் மனம் நிஅைலங்காது. மயிைனும் உறுதிப் பாடுடையது அவர் மனம், தான் உரைத்த சூளுரை தப்பிப் போகாவாறு விரைந்து வந்து வரைந்துகொள்வது உறுதி. அதை அவர் நாட்டு விலங்குகள் விளங்க உணர்த்துகின்றன. தோழி! அவர் உறுதிப்பாட்டின, உரம் மிக்க அவர் உள்ளத் தின் உயர்வை, வருத்த மிகுதியால் உணராது போயிற்று என் நெஞ்சு. அதனல் அது நெகிழ்ந்து விட்டது. நானும் ஆற்றாது அழுதுவிட்டேன்; உன்னையும் சினந்துகொண்டேன்: என் அறியாமையினை என்னென்பேன்?” என்றெல்லாம் கூறித் தன் மனத்துயர் மறைத்து, மகிழத் தசைப்பட்டாள் :

1. செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி

சுரையொழி தீம்பால் ஆர மாந்திப் பெருவரை கீழல் உகளும் நாடன்