பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s

கொன்றை மலர்களால் நிறைந்து காட்சியளிக்கும் குறுங் காட்டின் இடையே உளது நம் காதலி ஊர்” என்று அவளுர் இருக்கும் இடத்தை அவனுக்கு அறிவித்தான்.

ஊரைக் கூறியவன், அவ்வூரில் அவன் காதலி வாழும் வீடு எது என்பதையும் எடுத்துக் கூற விரும்பினன். அவள் வீட்டிற்குச் சிறப்பளிப்பன எத்தனையோ உள; ஆனால், அத் நியிேல் அவற்றுள் எதுவும் அவனுக்குப் புலப்பட்டிலது. இயல் இசை நாடகம் எனும் முத்தமிழிலும் வல்லவராய் வந்து தன் புகழ் பாடுவார்க்கு அவர் விரும்பும் பெரும் பொரு ளும், வறியராய் வந்து தன் வாயிற்கண் நிற்பார்க்கு அவர் வயிற்றுப்பசி போக்கும் பெருஞ்சோறும் அளிக்கும் அவள் தந்தையின் மனையற மாண்பு ஒன்றே அவன் மனக்கண்முன் வந்து நின்றது. தேர்ப்பாகனுக்கு அவள் மனையின் ஆடை யாளமாக அதையே கூறிஞன்,

காதலியின் காடு பொற்பேழைகளை நினைப்பூட்டும்: அவள் மன விருந்தோம்பும் விழுச் சிறப்புடையது’ எனக் கூறக் கேட்ட தேர்ப்பாகன், பாக! காதலியைக் கடிமணம் புரிந்து, அவளோடு கூடி, வருவார்க்கு வழங்கி வாழும் விழுமிய வாழ்வில் சென்றுளது என் வேட்கை; அதற்கு வேண்டும் விழுப்பொருளோடு வீடு திரும்புகிறேன். நான்: ஆகவே, என்னை விரைவில் கொண்டு சென்று, அவன் சேர்ப் பாயாக’ என அவன் கூருமல் கூறுவதாகக் கொண்டான். தேரை விரைந்து ஒட்டி, அவன் எதிரி நோக்கிய காலத்திற்கு முன்பே, அவனை அவன் ஊர்க் கண் கொண்டு சேர்த்தான்!

கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி கொன்றை ஒள்வி தாஅய்ச் செல்வர் பொன் யெய் பேழை முய்திறங் தன்ன கார்எதிர் புறவினதுவே, உயர்ந்தோர்க்கு இரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்