இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறும்பா
19
தேர்தலிலே வெற்றியினை மணந்தான்.
தில்லுமுல்லுப் பரத்தைகளைப் புணர்ந்தான்.
பேர், உடம்பு கெட்டதுடன்
பெற்ற ஊழல் பிள்ளைகளால்
யாரையுமே வெட்கமற்றுச் சினந்தான்!
o
சிறுவயதில் கத்திப்பெற்றான் பாலை
சேர்ந்தரசில் திட்டிப்பெற்றான் மாலை...
நிறுத்திவிட்டான் சிலைகளினைச்
செங்குட்டுவன் பேரன் என்றே
சிறகினத்தின் கழிவறையாம் சாலை!
o
அதிகாரத்தின் வாளெடுத்தாள் ஒருத்தி.
அவளுக்காக, மாந்தர்களை வருத்தி,
மிதித்தழித்தாள். வாளினையே
மேனிகாக்கச் சுழற்றி நின்றாள்,
பிடிகழன்று கழுத்தறுத்தது நிறுத்தி!
o
<அன்பைக்காண மறந்திட்ட ஓர் அழகி,
அரைகுறைகள், ஆரவாரம் பழகித்
தின்பதும், உடுப்பதுவும்,
திரைப்படமும் தேடித்தேடி