இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறும்பா
21
மரத்தில் 'கவிகள்' இருக்கும் என்றார் தந்தை,
மணிமலர்கள், சுவைக்கனிகள் விந்தை!
உரத்தகுரலில் வானொலியில்
ஊர்த்தலைவர் இறந்தார் என்று
வகர வரிசையில் கவிகளின் பெருஞ் சந்தை!
◯
கற்பனையின் பொன்னுலகைத் தேடிக்
கனவுகளின் அற்புதங்கள் பாடிச்
சொற்கோலம் இட்டுவந்தான்
சூழ்உலகைத் தான்மறந்தான்
மக்கள் அவனைத் துறந்துவிட்டார் ஊடி!
◯
நாடகத்தில் கோமாளிகள் இல்லை,
நாடகமா என்று நொந்தாள் முல்லை;
நாடு சிரிக்க அரசியலில்
நம் தலைவர் வந்ததினால்
நாடகத்தில் இல்லை. அந்தத் தொல்லை!
◯
விழா முழுதும் கண்டிருந்த கன்னன்,
அடிக்கும் மணிக்கு முன்பெழுந்தே
அனைவருமே ஒத்திசையில்
முடித்த நாட்டு வாழ்த்தே என்றான் பொன்னன்!}}