இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50
கோவேந்தன்
வெகு நூல்கள் படித்ததில்லை; போனால்
வெளியுலகும் தெரியாது; ஆனால்
தகுதியிலாப் போலிகளின்
தாளத்திலே கழித்துவிட்டான் வாணாள்;
வெகு நேரம் மேடை ஏறிப்
பேசமட்டும் கற்றுக்கொண்டான் தானாய்!
◯
ஒநாயினைப் பிடித்து வந்தாள் குறத்தி
ஒழுங்குபடத் தன்னுடன் வற்புறுத்தி,
ஆனாத நல் அன்புடனே
அறிவுரைகள் நல்லுணவும் அருந்திப்
பேணா வகை பேணினாலும்
பிடித்தோடிற்றே கோழிகளைத் துரத்தி!
◯
பதினோரு பேர் ஆடுகிற ஆட்டம்
பத்தாயிரம் பேர் பொழுதழிக்கும் கோட்டம்.
முதிரா அறிவு முட்டாள் எலாம்
பகரணீயில் மொய்த்துவக்கும் ஈட்டம்:
உதவாக்கரை பயல்கள் உடல்
உதறி உதறி எடுப்பதுவா ஒட்டம்?
◯
தகுதி தரம் இல்லை என்ற போதும்
தறுதலைகள் கூட்டம் கொண்டு மோதும்
மிகுதியான ஆட்சியிலே
மேம்படுமா நாடு, மக்கள் யாதும்?
வெகுளி எனும் குதிரை ஏறி
விரட்டிடுவார் விளையும் வறுமை தீதும்!