பக்கம்:குறும்பா.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

கோவேந்தன்


மலட்டுப் பசுவைச் சந்தையிலே கொண்டு
மடிநிறையும் பணத்திற்கு ஈந்தான் குண்டு:
கலப்பரசின் சட்டமன்றர்
கரும்பணத்தை வெள்ளையாக்கிக் கொண்டு
மலட்டுப் பசுவை அரசு பண்ணையில்
மடக்கிவிட்டார் மாதம் ஆயிரம் உண்டு!



செறியா உணவு கீழிறக்கும் சரக்காய்
திரைப்படங்கள் வாரம் வரும் முறுக்காய்,
அறியாமைகள் அத்தனையும்
அடகுவைத்து வெளிக்கொணர்ந்த பெருக்காய்,
புரியாமைகள் போக்கிலிகள்
புகுந்ததினால் படம் கழன்றது சுருக்காய்!



பாட்டரங்கம் சுவைக்கச்சென்றார் மக்கள்
பாடல் எல்லாம் மொழிதெரியாச் சொற்கள்.
நாட்டமைச்சர் புகழலுற்றார்
நற்றமிழில் இல்லை அந்தக் திக்கல்;
வீற்றிருந்தார் விட்டெறிந்தார்
வெளியில் இல்லை, கிடந்த சரளைக் கற்கள்!



மக்கள் எதற்குத் தேர்ந்தெடுத்தார் என்று
மதிமிகுந்தார் நன்குணர்ந்தார் இன்று.
சிக்கல் தீர்த்துச் செழிப்புண்டாக்கும்
செம்மனத்தார் சேரும் சட்ட மன்று
குக்கல் நானும் வகையில் அடியில்...
கொள்கைஇல்லார் நடவடிக்கை நன்று!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/61&oldid=1195873" இலிருந்து மீள்விக்கப்பட்டது