பக்கம்:குறும்பா.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

63


ஆயிரம் கட்சி ஆயிரம் தலைவர் நாட்டில்
அனைவருழைப்பும் மக்கட்கென்றார் ஏட்டில்:
ஆயிரம் திட்டம் ஆயிரம் கொள்கை
ஆயிரம் போக்கு கொண்டோர் ஒருமைப் பாட்டில்
தோயணும் என்று விழாவெடுத்தார்
ஆயிரம் தலைவர் ஒன்றுவது என்றோ கோட்டில்!



சூதாட்டத் தூண்டிலிலைப் போட்டுச்
சுரண்டுகிற முதலாளிய வேட்டு
ஆதாயத்தை அரசியலின
அரவணைப்பில் கொள்ளையிட்டுக், காட்டு
ஒநாயாகச் சாகடிப்பார்
மக்களுயிர் உறிஞ்சுவதில் கூட்டு!



பொதுவுடைமை பொலிந்திடாஇந் நாடு
புற்றரவின் நச்சுமலைக் காடு
எதிலும் எங்கும் தன் னலத்தின்
இரைபிடிக்கும் சிலந்திவலைக் கூடு.
எதுவரைக்கும் இதுநிலைக்கும்
எரிமலையாம் புரட்சிமக்கள் பாடு!



அன்பின்விழிகள் சாவிருளின் ஊடும்
அகன்வானின் விண்மீன்களாய்ப் பாடும்.
அன்பின் பாதம் காலணிகள்
எவையும் இன்றிக் கல்லில் முள்ளில் ஓடும்:
அன்பே என்றும் இறப்பைவென்று
அனைத்துலகை அரவணைத்துக் கூடும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/66&oldid=1201096" இலிருந்து மீள்விக்கப்பட்டது