பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 101 பார்த்தான். பார்த்தது மட்டுமல்ல. "என்ன மியான், இன்னைக்கு, டியூப் போட்டு எத்தனை லிட்டரை உறிஞ்சி எடுத்து வித்தே..மூணு லிட்டர் தேறியிருக்குமா?" என்றான். டிரைவருக்கு பெட்ரோல் மாதிரி பற்றி எரிந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டான். நான்கு நாள் கழித்து, 'ஸார், என்னோட டி.ஏ. பில்லை பாஸ் பண்ணுங்க சிவராமன் பில்லை பாஸ் பண்ணிட்டிங்க என்னுத மீட்டும் வச்சிருக்கிங்க. நாளைக்கு ஆட்டுத்தலை வாங்கி சாப்பிடணுமுன்னு நினைக்கிறேன். தயவு பண்ணி இன்னைக்காவது பாஸ் பண்ணுங்க" என்றான். "ஆ.ஆட்டுத் தலையா? எவ்வளவு ருசியா இருக்கும்! மியான் எனக்கும் ஒரு தலை வாங்கித் தந்திடு." "நீங்க பாஸ் பண்ணுங்க. நான் வாங்கித் தாறேன்." "நீ வாங்கித் தா. நான் பாஸ் பன்னுறேன். வாகிப்பமியான், பல்லைக் கடித்துக் கொண்டான். மானேஜரை அன்று சாயங்காலம் வீட்டில் டிராப்' செய்யப் போகும்போது, "லார், நீங்க எவ்வளவு நேர்மையாக இருக்கிங்க ஆனால், பண்டாரம் என்கிட்ட ஆட்டுத்தலை கேக்கிறார். அது கொடுக்காட்டா டி.ஏ.வை பாஸ் பண்ண மாட்டாராம்" என்றான். மானேஜர் "அப்படியா?" என்று கேட்டுவிட்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸை எடுத்தார். வாகிப்பமியான் வருத்தப்பட்டான். ஒரு மானேஜர், ஊழியன் ஒருவன் சொல்லும் பிரச்சினையை 'குத்துக்கல் மாதிரி உணர்ச்சி இல்லாமல் கேட்டுக் கொண்டு, கண்டுக்காமலா இருப்பது? டிரைவர் மனசைத் தேற்றிக் கொண்டான். மானேஜர் பெரிய ஆபீஸர். டிரைவர் கிட்ட கேட்டும் கேட்காதது மாதிரிதான் இருக்க்னும். நாளைக்கு பண்டாரத்தை விடுவிடுன்னு விடுவார். மானேஜர் விடுவிடுன்னு விடவில்லை. பண்டாரம், முன்னை விட மகிழ்ச்சியாகத்தான் இருந்தான். சாட்சியை விட சண்டைக்காரன் தேவலை என்பதை உணர்ந்த டிரைவர் பண்டாரத்திடம் போய் "ஸ்ார்.டி.ஏ, இன்னும் நான் ஆட்டுத்தலை வாங்கல" என்றான். "ஒன் வான் ரிப்பேர் சமாச்சாரம் இப்போ எனக்கு மட்டுந்தான் தெரியும். மானேஜருக்குத் தெரியணுமுன்னா,