பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 105 தான் அவர் காதில் சதா ஒலித்த உத்தியோக மந்திரங்கள். அவற்றிலும் தோல்வியடைந்து, அதன் பலனாக உயர்நிலைப் பள்ளியில் எல்.டி. அஸிஸ்டெண்டாகச் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும்போது நோட்ஸ்’களை மட்டும் படித்த குற்ற உணர்வில், கையில் கிடைத்த புத்தகங்களைப் படித்து அறிவை விரிவாக்கினார். மாணவர்களோடு, தோழமையோடும். அன்போடும் பழகுவதை அவரின் பலமாகக் கருதிய பள்ளி நிர்வாகி, தலைமை ஆசிரியர் பதவியில் யாரைப் போடலாம் என்று வந்தபோது அவரின் மானவர் தோழமையை ஒரு பலவீனமாகக்கருதினார். ஆகையால், அவருக்கு ஜூனியரான ஒரு ஆசிரியரைத் தலைமை ஆசிரியராக்கி, தனது தங்கையைக் கொடுத்தார். இதனால் மனமுடைந்த சங்கரன், தனது மகனை ஒரு இன்டெலக்சுவலாக்கி ஒரு பெரிய பதவியில் அமர்த்தி, தன்னைப் போன்றவர்களுக்கு ஏற்படும் அநீதிகளை, அவன் தனது பிரிவில் நிகழாமலாவது பார்த்துக் கொள்வான் என்ற மானசீக எண்ணத்தோடு இருக்கிறார். கணேசன், ஆசனப் பயிற்சியினால் பிரத்யட்ச உலகை மறக்கக் கூடாது என்பதற்காக மார்க்ஸ், ஏஞ்சல்ஸ் ஆகியோரின் புத்தகங்களைப் படிக்க வைத்தார். நேரு, காந்தி, அரவிந்தர், பெர்னாட்ஷா போன்ற மேதைகளின் படைப்புக்களையும் சொல்லிச் சொல்லி படிக்கச் செய்தார். பல நூல்களைக் கற்ற கணேசன், எம்.ஏ.வில் முதல் வகுப்பில் தேறி, அறிவுச் சுடராய் விளங்குகிறான் என்ற எண்ணத்தோடு, மகனைப் பார்க்கப் பார்க்க சங்கரனுக்குத் திகட்டாத தேனாக இருந்தது. கணேசனின் செல்பில் அரவிந்தரின் பவுண்டேசன் ஆப் இந்தியன் கல்சர்' நேருவின் 'டிஸ்கவரி ஆப் இந்தியா' மகாத்மா காந்தியின் எக்ஸ்பிரிமென்ட்வித் டுரூக்’, சர்ச்சிலின் ஹிஸ்டரி ஆப் தி ஓர்ல்ட் வார். கா.சு. பிள்ளையின் 'தமிழ் இலக்கிய வரலாறு' ஆகியவை உட்பட பல புத்தகங்கள் இருந்தன. மேஜையில் காவான். ரீடர்ஸ் டைஜெஸ்ட், இம்பிரின்ட், நியூஸ்வீக், விகடன், தாமரை, தீபம், இந்தியா:74 ஆகியவை விரிந்து கிடந்தன. கணேசன் தற்செயலாகக் கண்களை நிமிர்த்தியபோது, தந்தை தன்னையே உற்றுப் பார்ப்பதைக் கவனித்து லேசாக சங்கோஜப்பட்டபோது, சங்கரன் வெளியே வந்து, ஒரு முக்காலியில் உட்கார்ந்து கொண்டே "இன்டர்வியூ என்றைக்கு?" என்றார். அரசாங்கத்தில் ஒரு பெரிய வேலைக்கு அவன்