பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 குற்றம் பார்க்கில் பிடிச்சதும் கிடையாது..." "அதனாலதான் சிகரெட்டின் ஒரு நுனியில் தீயும், இன்னொரு நுனியில் முட்டாளின் வாயும் இருக்குன்னு சொன்னாரா?" "ஆமாம். மகாத்மா காந்தி இறந்தபோது". உலகில் மிக நல்லவர்களாக இருப்பது மிக மிக ஆபத்து" என்று அருமையாகச் சொன்னார். "ஆனால், ஷாவை காந்திஜிக்கும் பிடிக்கல. டால்ஸ்டாய்க்கும் பிடிக்கல. டால்ஸ்டாய்க்கு காந்திஜியை பிடிச்சுது." + "டால்ஸ்டாயின் 'அன்னாகரினாவை விட, அவர் ‘எப்படி?’ வாழ்க்கையே சிறந்த நாவல்." "டால்ஸ்டாய்க்கு, பேரும் புகழும் கிடைச்சதும், டால்ஸ்டாயிஸம் அவரைவிட சக்தி வாய்ந்ததா ஆச்சுது. டால்ஸ்டாய், அந்த "இமேஜிக்கு தக்கப்படி வாழனுமுன்னு நினைச்சி, தன் புத்தகங்களுக்கான ராயல்டியை ஒரு பப்ளிக் டிரஸ்டா ஆக்க நினைச்சாரு. இது அவரு மனைவிக்குப்பிடிக்கல. ஒரே சண்டை. கடைசில மனுஷன். மனைவியை விட்டு ஓடிப்போயி ஒரு ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் வீட்ல இறந்தாரு அவரு வாழ்க்கையைக் குறைந்தபட்சம் எழுத்தாளங்களாவது படிக்கணும்!. "இந்த வகையில் பார்த்தா, திருப்தியோடு இறந்த ஒரே இலக்கியவாதி இரவீந்திரநாத் தாகூர்தான். தாகூர் பூமித் தாயிடமிருந்து விடை பெறுறதா எழுதின கவிதை, என்னைக்குமே நெஞ்சைவிட்டு விடைபெறாது. சாவை. வாழ்க்கையின் இன்னொரு பகுதியாக, அதாவது, குழந்தை, தாயின் மார்பகத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதியில் பால் அருந்த தலையை எடுப்பதாகத் தாகூர் வர்ணிச்சாரு. ஆனால், ஷாவுக்கும் மரணபயம்!" "ஷாவை ஏன் சர்ச்சிலுக்குப் பிடிக்கல?" "அவரு யாரைத்தான் நேசிச்சாரு? சர்ச்சில் ஒரு இம்பிரியலிஸ்ட் நம்ம காந்திஜியையே அரை நிர்வாணப் பக்கிரி'ன்னு சொன்னார். காந்தியடிகள் இறந்தபோது கூட ஒரு அனுதாபச் செய்தி சொல்லல. நம்ம பத்திரிகைதான் அவரை அாைவாசியமாப் பெரிசுபடுத்தின. "உண்மைதான்: சர்ச்சில் நான் பேசும்போது மற்றவங்கள்ை