பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 குற்றம் பார்க்கில் இருந்திட்டாரு. அவ்ரு போகும்போது என் கையால் உணவு கொடுக்காத பாவியாயிட்டேன்." "அதாவது, அவர் மேல் இருந்த கோபத்துல சமைக்காமல் இருந்திட்டிங்க." விமலா விக்கி விக்கி அழுதாள். அவள் அழுது முடியட்டும் என்று நிதானமாகக் காத்திருந்து விட்டு சைக்கியாட்ரிஸ்ட் மீண்டும் கேட்டார். "போகட்டும் இப்போதான் நாம் உண்மைகிட்ட நெருங்கி வந்து கொண்டிருக்கிறோம். நான் உங்க சகோதரர் மாதிரி. எட்டுமாத கர்ப்பிணி மனைவியை விட்டுப் போறவரு ஒரு புருஷனா என்று நினைத்ததோடு, வேறு யாரையாவது கல்யாணம் பண்ணியிருக்கலாமே என்று உங்களுக்குத் தோன்றியதா?" என்ற வினாவைக் கேட்டு விமலா திகைத் துப் போனாள் "உங்களுக்கு எப்படி இது தெரியும்?" "எப்படியோ. உங்க பொண்ணு ஒழுங்கா ஆகணுமுன்னா, உண்மையைச் சொல் விடுங்க. இன்னாரைக் கட்டியிருக்கலாமுன்னு யாரையாவது நினைச் சீங்களா?" "காலேஜில் என்னையே ஒருவன் சுற்றிச் சுற்றி வந்தான். ஆனால், நான் லட்சியம் பண்ணலே!" "உங்கள் கணவர் ராணுவத்தில் சேர்ந்ததும், காலேஜ் பையனைக் கட்டியிருக்கலாமே போயும் போயும் இரக்கமில்லாத ஒருவரைக் கட்டினோமே'ன்னு வருத்தப்பட்டீங்க இல்லையா?" விமலா மெளனமாகத் தலை குனிந்தாள். டாக்டர் விமலா வின் நிலைமையை உணர்ந்து பேச்சைத் தொடர்ந்தார்: "சும்மா சொல்லுங்க." 'அந்தப் பையனை மனத்தில் நினைத்தது உண்மைதான். ஆனால், நளினா பிறந்த பிறகு அவனைப் பற்றிய சிந்தனை அடிக்கடி வரலே. இப்போ என் லட்சியம் எல்லாம் என் மகள் நல்ல நிலையில் வாழனும் என்பதுதான். ஆனால், அவளும் மனக் கோளாறு உள்ளவளாய் இருக்கிறாள்." "கோளாறு உங்ககிட்டதான் இருக்கு குழந்தை