பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க-சமுத்திரம் 15 வைக்கிறதா முடிவு பண்ணிட்டேன். ஆனால் அதுவரைக்கும் நீ அவள் பின்னால் திரியக்கூடாது. இது சுத்தமான ஊருடா. பொண்ணு பின்னால பப்ளிக்கா பல்லைக் காட்டிக்கிட்டு நடக்கறது நாகரிகமாவாது. உன் அப்பாகிட்ட சொல்லி முடிச்சிடுறேன்: அதுவரைக்கும் உன்னை அந்தப் பொண்ணோட நான் பார்க்கக் கூடாது. நான் சொல்றது புரியதாடா?" "புரியுது ஸார். அப்பா கிட்டே எப்போ?" "எப்போன்னு எனக்குத் தெரியும்டா. இப்போ நீ திரும்பிப் பாராம ஒடுடா." 'அண்ணாவி’ என்று நடுத்தர வயதினராலும், 'ஸார்' என்று இளைஞர்களாலும் அழைக்கப்படும் பூதலிங்கம்பிள்ளை அந்த ஊருக்குக் குடிவந்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அந்தக் காலத்தில் ஐந்தாவது வரை படித்துவிட்டு, லோயர் கிரேட்' வாத்தியாராக, திண்ணைப் பள்ளிக்கூடத்தைத் தொடக்கி வைத்தவர் அவர் தான். தங்கையா, ராமசாமி உட்பட அந்த ஊரில் ‘லிட்டரேட்டுகள்' அத்தனை பேரும் அவரிடம் ஒண்ணாம் வகுப்பில் சேர்ந்தவர்கள். ஆற்று மணலை கோவிலுக்கு எதிரே இருந்த திட்டில் கொட்டி, அதில் உயிர், மெய் எழுத்துக்களை ஆக்கிக் கொடுத்தவர் அவர் அப்போது, அந்த ஊருக்குச் சிலேட்டோ, கரும்பலகையோ எட்டிப் பார்க்கவில்லை. மாணவர்களுக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்ததும், ஒலைச் சுவடிகளில், எழுத்தாணியால் 247 எழுத்துகளையும் எழுதிச் சொல்லிக் கொடுத்தார். "கடவுளை எந்நாளுமே கனவிலும் மறவாதே" என்ற பாடலை அவர் முன்னால் பாட, மாணவர்கள் அதை கோரலாகப் பின்னால் பாட, அந்த ஊரின் நம்பிக்கையே அந்தப் பாட்டில் உருவெடுக்கும். பள்ளிக்கூடத்தை ஒரு குருகுலமாக நினைத்து அவர் செயல்பட்டதால், ஊரே அவரை ஒரு குருவாக மதித்தது. அப்போது 'ஸ்ாள்' 'அண்ணாவியாக இருந்த காலம். அண்ணாவியின் கையிலிருந்த வாதமடக்கிக் கம்புக்குப் பயந்து புளிய மரங்களில் ஏறிப் பதுங்கிக் கிடந்த பையன்களை,'விசுவாச. பையன்களின் உதவியோடு போய், மரத்தில் இருந்து இறக்கி, பள்ளிக்கூடத்துக்கு இழுத்துக் கொண்டு வந்து, 'சுமத்து சுமத்துன்னு சுமத்தி'ய் படிக்க வைத்தார். சில புளியமர வாசிகள்' அவரால், இன்று ஆபீஸர்களாய், பங்களாவாசிகளாய் இருக்கிறார்கள்.