பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க-சமுத்திரம் S3 சேந்துட்டான் இதை எதுக்குடா பெரிசு படுத்தனும்?" முத்தையனுக்கு ஆத்திரம் வந்தது. "நீரு சும்மா கிடயும் சின்னப்பய அருமை எனக்குல்லா தெரியும் நீரு நாலு காடு கத்தியிருந்தா, இப்படிப் பேசியிருக்கமாட்டீர் பாவூர் சத்திரத்தில் ஒரு போலீஸ்காரன்...ஒருவன், நான் வண்டில அதிகமா பாரம் ஏத்திக்கிட்டுப் போனா ஒரு டியும், இரண்டு போண்டாவும் அபராதம் போடுவான் நேத்து என்னடான்னா, எனக்கு நெஸ்கட் காபி வாங்கித் தரான் நம்ம சின்னப்பய சின்ன எஜமான் ரூட் வேலையில் சேர்ந்துட்டாரேன்னு கேக்குறான் முத்துப்புதியவன், ஒரு தந்தைக்குரிய பெருமையில், கடித்த மூட்டைப் பூச்சியை நசுக்காமல் வெயிலில் துக்கிப் போட்டுக் கொண்டே, "வேண்டான்னு பாக்குறேன். அதோடு பணம் இல்ல. " என்றார் "நம்மள, இந்த ஊர்க்காரப் பயல்க என்னபாடு படுத்தறாங்கன்னு உமக்குத் தெரியும் இனிமெ கிட்ட வருவாங்களா? இவங்க முன்னால எங்க சின்னப்பய பெரிய மனுஷனாயிட்டான்னு காட்டவேண்டாமா? நீரு பேருக்கு வந்து நின்னா போதும், பணத்தை நான் கவனிச்சுக்கிடுறேன் " முத்தையன், பெரியய்யாவின் பதிலுக்குக் காத்திராமல், அங்கே கிடந்த கோடாலி'யை எடுத்துக் கொண்டு மரம் வெட்டப் போய்விட்டான் முத்துப்புதியவன், முத்தையன் பணம் செலவழிக்கப் போகிறானே என்று சங்கோஜப்படவில்லை ஏற்கனவே, சின்னப்பயல் என்ற செல்லப் பெயரைக் கொண்ட சின்னச்சாமி, பி. ஏ. படிப்பதற்காக, நிறையப் பணம் கொடுத்திருக்கிறான். அந்த உதவி சாகரத்தில், பெரியய்யாவின் சங்கோஜகாயம் கரைந்து போய்விட்டது அந்த ஊரில் முத்துப்புதியவனும், அவரது சொந்தக்காரர்களும் எளியவர்கள் ஆள் பலமும், பண பலமும் இல்லாத அவர்களை, பக்கத்துத் தெருக்களில் உள்ள காரை வீட்டுக்காரர்கள், ஒரு சின்னத் தகராறு வந்தாலும் போதும். கை வைத்துவிடுவார்கள் முத்துப்புதியவனையே எத்தனையோ தடவை அடித்திருக்கிறார்கள் முத்துப்புதியவன் திருப்பி அடிப்பதற்கு எவ்வித முயற்சியும் செய்யமாட்டார் அந்த முயற்சியின் விளைவகள் அவருக்குத் தெரியும் சமாதான சக வாழ்வு' வேண்டுமானால், நூறுக்கும் மேலான தடியன்களைச் டு-பா. 3.