பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 45 சம்பந்தியைச் சமாளிக்க யாராலும் முடியவில்லை. அவர் நேராக மணப்பந்தலை நோக்கிப் போனார். அதற்குள் மணமகன் கிழே இறங்கி தந்தையிடம் சென்றான். பெருமை அனைத்தையும் இழந்து தலைகுனிந்தார். சிவராமன். சாந்திக்குத் தந்தையின் நிலை கண்டு வருத்தம். அதே நேரம் 'அவர் தந்தையைச் சமாதானப்படுத்தப் போவதில் ஒரு பெருமை. "அவரல்லவோ ஆண்மகன் பணம் பெரிதில்லை. பந்தம் பெரிது' என்று தன் தந்தையிடம் சொல்லப்போகிறார்..." சாந்தி கற்பனையில் லயித்தாள். சாந்தியின் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தன. அவள் என்ன காண்கிறாள்? அவரும் தந்தையோடு சேர்ந்து கொள்வதுபோல் தெரிகிறது. அவரும் உரக்கப் பேசுகிறார்! சாந்திக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த அவள் அக்காள், தகராறு நிலவும் இடத்துக்குப் போய்விட்டு மீண்டும் மனப்பந்தலுக்கு வந்தாள். "என்னவாம் அக்கா........... 'அவர், என்ன சொல்கிறார்?" என்று சம்பிரதாயத்திற்கு விரோதமாகக் கேட்டாள், சாந்தி. "உன் மாப்பிள்ளையும் அவர் அப்பாவும் சேர்ந்து கொண்டு வீம்பு பேசுகிறார்கள். இரண்டாயிரம் வராவிட்டால் தாலி கட்டமாட்டாராம்..." பரபரப்பான கூட்டத்தில் இன்னும் ஒரு பரபரப்பு. சிவராமன் தன் சம்பந்தியின் கால்களில் இரண்டு கைகளையும் குவித்து எழுந்தார். சாந்தி தன் கண்களை மூடிக் கொண்டாள். பிறரின் கைகளைக் கூட கெஞ்சலின் அறிகுறியாகப் பிடிக்காத அவரின் இரு கரமும், சாந்தியின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அந்தப் பணக் கடவுளின் காலடியை வணங்கின. கூட்டத்தினிடையே ஓர் உருக்கம். பசுமையாக இருந்த சாந்தியின் உள்ளம் அந்தப் பகமையின் சில்லிட்ட குளிர்ச்சியில் பனிக்கட்டியாய் உறைந்தது. திருமணம் காணவந்த உறவினர் அனைவரும் மாப்பிள்ளையின் தந்தையிடம் மன்றாடினர். ஒரு வழியாகச் சம்பந்தி சமாதானமானார். "இதெல்லாம் சகஜம் சம்பந்தி சண்டை இல்லாத கல்யாணமே இல்லை" என்ற குரலைக் கேட்டு அதுவரை கண்களை மூடியிருந்த சாந்தி கரங்களை விடுவித்தாள்.