பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கலெக்டர் வருகிறார் ஊராட்சி ஒன்றியம் என்ற போர்டு ஒன்று மட்டும் இல்லையானால் அந்தக் கட்டிடத்தை மண்டிக்கடை என்று சொல்லுவார்கள். கட்டிடத்தின் தனி அறை ஒன்றில், ஆணையர், கமிஷனர். பி.டி.ஓ. அப்பாவி, எமகாதகன், பொறுக்கி என்று பல்வேறு தரப்பினரால் பல்வேறு விதமாக அழைக்கப்படும் மனிதர் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தார். "குட் மார்னிங் சார்", என்று சொல்லிக் கொண்டே யூனியன் மானேஜர் அவர் எதிரே உட்கார்ந்தார். "புது கலெக்டர் வரார் சீக்கிரமாய் வரக் கூடாது?" மானேஜர் ஒரு பெருச்சாளி. சிறிய குற்றம் சாட்டப் பட்டாலும் உடனடியாக இன்னொரு நபர் மீது பெரிய குற்றத்தைச் சாட்டி விடுவார். "சார், நம்ம விவசாய வளர்ச்சி அதிகாரி இன்று லீவ்." "ஏனாம்?" "அவங்க நிலத்தில் அறுவடையாம்." "பெர்டிலைஸர் டிஸ்ட்ரிபியூஷன், கிணறு வெட்டுவோன், விவசாயக் கருவிங்க விற்பனை இதையெல்லாம் கலெக்டர் கேட்டாருன்னா யாரய்யா சொல்றது?" "நம்ம யூனியன் இன்ஜினியரும் லீவ்." "அவருமா?" "ஊர்ல வீடு கட்றாரு அதைப் பார்க்கப் போயிருக்காரு. "என்னய்யா இது அநியாயம்? கலெக்டர் என் தாலியை அறுத்தால் யாருய்யா திருப்பிக் கட்டுறது? பைனான்ஸியல் இயர் எண்டு, எந்த ஊருக்கு ரோடு வேணும், பாலம் வேணும் என்கிறதைக் கலெக்டர் கேட்டா எவன் பதில் சொல்லுறது?"