பக்கம்:குற்றால வளம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

95

காந்தியடிகளைத் தடுத்தார்களென்றால் மற்றவற்றைப்பற்றி எழுத்துவானேன்.

தீண்டத்தகாத நிலையிலுள்ளாரைக் கோவிலினுள் விடுவதில்லை யென்றால், அது பொருளோடு இருக்குமானால் நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். தீண்டத்தகாத செயல்களை யார் யார் செய்கின்றாரோ அவரையெல்லாம் கோவிலுள் விடாதீர்கள் அது முடியுமா? அப்படியானால் பார்ப்பார் என்று சொல்லிக்கொள்ளுவோருள்ளும் மற்றும் உயர்ந்த வகுப்பாரென்று சொல்லிக்கொள்ளுவோருள்ளும் பலர் கோவிலுள் நுழையத் தகுதியற்றாருளர். அவரெல்லாம் தாராளமாக நுழைய, பொருளின்றி ஒரு கூட்டத்தாரை ஏன் நிறுத்தல் வேண்டும். அவ் அநீதிகளெல்லாம் பார்ப்பார்தாம் செய்கின்றாரென்று பகருதல் தவறு. எல்லோரும் செய்கின்றார், திருச்செந்தூரில் வாணிய சகோதரர்களைக் கோவிலுக்குள் விடலாகாது என்று வாதாடியவர்களுள் பெரும்பாலார் திருநெல்வேலி ஜில்லா வேளாள நண்பர்களே, யாவர். இன்னவற்றை யாரும் செய்தலாகாது. சிலர் தங்கட்கு மேலான வகுப்பு என்று தாங்கள் கருதிக் கொண்டிருப்பவரோடு தாம் கலக்க விரும்புகின்றனர்; தங்கட்குக் கீழானவர் என்று கருதிக்கொண்டிருப்பவரை அடக்கவே விரும்புகின்றன்ர். இவர் பெரிய பேதைகளே யாவர்.

உண்மையோடும் நடுநிலையோடும் இவ்வகுப்பு வேற்றுமையை ஒழிக்க அன்பர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/104&oldid=1534960" இலிருந்து மீள்விக்கப்பட்டது