பக்கம்:குற்றால வளம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

97


தன்கேளலறச் சென்றான் எனப்படுதலை, எத் துணைக்காலம் இருப்பினும் முடிவில் இறப்பது சரதம். ஆதலால் உடலொன்றையே பேணி அதன்பொருட்டு அஞ்சி நல்லவற்றிற் றலைப் ப்டாதிருத்தல் தகாது. இதனால் உடலைப் பேண வேண்டாமென்று நான் கூறுவதாக எவரும் கொள்தல் ஆகாது. உடலின்றிய உயிர் ஒன்றும் செய்யமுடியாது. உடம்பைத் துணையாகக் கொண்டுதான் உயிர் இயங்க முடியும். அதனாலேயே "உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே" என்றார் திருமூலனார்.

நில்லாத உடலாசை கொண்டு அழியாத உயிர்க்குறுதி பயக்கும்வினைகளை ஆற்றாதொழிதல் ஆகாது என்பதற்காக இத்துணை கூறியது நாட்டின் நலத்திற்கு இவ் வகுப்புப் பூசல் போன்றன. பெருங்கேடு விளைக்கின்றன. இன்னோரன்னவற்றை மக்கள் அறியுமாறு உள்ளவாறுணர்த்த வேண்டுவது மிகவும் அவசியம். இப்பணியில் தலையிட வேண்டுமென்று எனது அன்பர்களையெல்லாம் வேண்டிக்கொள்கிறேன்.




"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/106&oldid=1534961" இலிருந்து மீள்விக்கப்பட்டது