பக்கம்:குற்றால வளம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

 தீண்டத்தகாதார் யார்?

 எல்லாக் கொள்கையையும் பலப் பலர் பல மாதிரி பகர்ந்திருப்பர். பிறர் துணைகொண்டே உயிர் வாழ்தல் என்றும் முடியாத காரியம். எவர் என்ன இயம்பியிருந்தால் என்ன? எல்லோரும் நம்போன்ற மனிதர்கள்தாம்? ஒவ்வொருவருக்கும் சொந்த அறிவுண்டு. "அவர் சொல்லியிருக்கிறார்; இவர் சொல்லியிருக்கிறார்" என்பதைக் காட்டிலும் "நான் சொல்லுகிறேன்; நீ காரணங்காட்டி முடிந்தால் மறு" என்று மொழிவதே சிறப்புடைத்து. கண் கூடாகக் காரணத்தோடு மறுக்க முடியவில்லை யானால் தப்பித்துக் கொள்வதற்காக அவரையும் இவரையும் எடுத்தாண்டால் அதற்கு உடன்பட்டு யாரே, கொள்கையை விடப் போகிறார்? அறிஞர் இப்பூச்சாண்டிகட்கெல்லாம் சிறிதும் அஞ்சப்போவதில்லை யென்பதில் எனக்கு ஐயமில்லை.


"அநியாயமாக ஒரு பெரும் வகுப்பாரைத் தீண்டத்தகாதாரென ஏன் ஐயா ஒதுக்குகின்றீகள்?" என்றால் அதற்குக் காரணம் கூறுதல் வேண்டாவோ? காரணங் கூற அறியாது வீணாக ஒரு வகுப்பாரைத் தீண்டத்தகாதாரென்று எவர் சாற்றுகின்றாரோ அவரே தீண்டத்தகாதாரென நாம் ஒதுக்கவேண்டும். "ஒரு காரணமுமின்றித் தொடக்கத்தில் இப்பெரும் வகுப்பார் தீண்டத்தகாதார் என ஒதுக்கப்பட்டிருப்பாரா?" என்று கேட்கலாம். காரணம் இல்லையென்று இயம்பமுடியாது. நானும் இல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/109&oldid=1322969" இலிருந்து மீள்விக்கப்பட்டது