பக்கம்:குற்றால வளம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

101

லையென்று செப்பவில்லை. காரணம் உண்டு. அதனைக் கண்டறியும் அறிவிழந்து இன்னும் இவ்வகுப்பாரையெல்லாம் பொருள் இன்றிக் தீண்டத்தகாதார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் ஒரு பகுதியார். ஆராய்ச்சி உலகில் நுழைந்தால் இம்மூட எண்ணத்தை விட்டொழியாதிருக்க முடியாது.


ஜாதி என்பது பெரிய மாயையாக இந்தியாவை ஆட்டுகின்றது. ஜாதிகளின் உண்மையறியாமையாலேயே மக்கள் மயங்கி அழிகின்றார். இறைவன் என்ற ஒருவன் மக்களைப் படைக்கும்பொழுது, நீ இன்ன ஜாதி, நீ இன்ன ஜாதி எனப் படைத்தான் என்றால் எவ்வளவு அறியாமை! அவ்வாறானால் மக்கட் ஜாதிக்குள்ளே இறைவன் தான் வேறுபடுத்திப் படைத்த ஒவ்வொரு பிரிவுக்கும் உருவத்தில் அடையாளங்கள் ஏதேனும் வைத்திருக்கின்றானோ? பார்ப்பான் என்பவனுக்கு நான்கு. கைகளும் அரசன் என்பவனுக்கு மூன்று. கைகளும் வணிகன் என்பவனுக்கு இரண்டு கைகளும் வேளாளன் என்பவனுக்கு ஒரு கையும் தீண்டத்தகாதவன் என்பவனுக்குக் கையில்லாமலும் செய்தோ அன்றி வேறு எந்த வேறுபாடாவது தோன்றும்படியாகவோ படைக்கின்றானோ?


பார்ப்பான் என்பவனுக்கும் பறையன் என்பவனுக்கும் மற்றையோனுக்கும் உருவத்தில் எவ்வித வேறுபாடும் காணவில்லை; உணர்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/110&oldid=1325592" இலிருந்து மீள்விக்கப்பட்டது