பக்கம்:குற்றால வளம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தீண்டத்தகாதரர் யார்?

 சியிலும் எவ்வித வித்தியாசமும் இல்லை; செயலிலும் எந்த மாறுபாடும் இல்லை. மனிதர்கள் என்ற ஒரே நிலைமையைத் தவிர எந்த மாறு பாடும் காணப்படா நிலையில்-பலவேறு ஜாதியென்று பகரப்படுவோருள்ளும் எல்லா வகையான கூட்டுறவும் நிகழும் நிலையில், பிறப்பில் ஜாதியாகப் பிரித்து படைக்கப்பட்டது என்ற பெரும் பேதைமைக்கு என்னே பொருள்? எனவே தீண்டத்தகாதார் எனப் பிறப்பிலேயே எவரும் படைக்கப்படவில்லை. ஆனால் இன்று பிறப்பினால் ஒரு வகுப்பார் தீண்டத்தகாதார் என ஏன் கொள்ளப்படுகிறார்? மற்ற ஜாதிகள் கொள்ளப்படும் அறியாமைக் கொள்கை போலவே தீண்டத்தகாதாரும் கொள்ளப்படுகிறார். இடைக்கால மக்கள் அறியாமையால் நிகழ்ந்த கேடுகளுள் இதுவும் ஒன்று.


மக்கள் உயர்வு தாழ்வு எல்லாம் செயல் பற்றியேயன்றிப் பிற எதுபற்றியும் அன்று. தீண்டத்தகாத செயலை எவர் செய்கின்றாரோ அவர் அச்செயலைக் கையாளும் வரையும் தீண்டத்தகாதாரே யாவர். பண்டைநாள் தீண்டத்தகாத செயல் செய்தோர் அச்செயல் திருந்த வேண்டி உயர்ந்த மக்களால் தீண்டத்தகாதாராக ஒதுக்கிவைக்கப்பட்டார். ஒரேமக்கட்குழுவிலேயே ஒரு சிலர் இழித்த செயல் செய்தால் அச்செயல் காரணமாக அவர் இழிவுபடுத்தப் படுவதென்பது ஒன்று இருக்குமானால் தவறிய அவர்நாணமுற்று அச்செயல்விடுத்து நல்வழிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/111&oldid=1325597" இலிருந்து மீள்விக்கப்பட்டது