பக்கம்:குற்றால வளம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

103

 படுதல்கூடும். இந்நல்நோக்கங் கொண்டே தொடக்கத்தில் தீண்டாமையும் பிறவும் கையாளப்பட்டிருத்தல் வேண்டும். அதனால் பலர் திருந்தி வந்திருத்தலுங் கூடும். அதற்கும் திருந்தாது அவ் இழி செயலிலே நின்றோர் ஆயுள் வரையும் தீண்டத் தகாதாராகவே இருந்து மாண்டுபட்டிருப்பர். அவர் வழிவழிவந்த அனைவரும் தீண்டத்தகாதார் என்று கொள்வது போன்ற அறியாமை என்னிருக்கிறது! நாளடைவில் அவர் பரம்பரையாரெல்லாம் தீண்டத்தகாதாராகக் கொள்ளப்பட்டு விட்டார். தகப்பன் யோக்கினானால் மகன் யோக்கியனென்றும் தகப்பன் அயோக்கினனனானால் மகனும் அவ்வாறே யென்றும் தீர்மானிக்க முடியுமா? உலகத்திய நடைமுறை அப்படி யிருக்கிறதோ? இது, தெரிந்துகொள்ளமுடியாத தேவலோகத்துச் செய்தியல்லவே! கண்ணுக்குத் தெரியும் நாம் வாழுகின்ற இப்பாக்த பேருலகில் ஒவ்வொருவரும் கண்கூடாகக் காணக்கூடிய ஒன்றன்றோ இது. இதற்குச் செய்யுட் சான்றும் சாத்திர மேற்கோளும் வேண்டாமே. வேறு முறையில் வேண்டுமானால் இதற்கு வாதிக்கலாம். அது எனக்குத் தெரியும். அவ்விவாதம் ஈண்டு வேண்டாம். அதன்முடிவும் என் கொள்கைக்குப் பெரிதும் துணைபுரிவது என்பதைப் பேரறிவுள்ளோர் ஆராயிற் காண்பர்.


ஒவ்வொருவனுக்கும் தனித்தனியே அறிவுண்டு; குணமுண்டு செயல் செய்யும் ஆற்றல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/112&oldid=1325605" இலிருந்து மீள்விக்கப்பட்டது