பக்கம்:குற்றால வளம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

தீண்டத்தகாதர் யார்?

 தனித்தனியே உண்டு. தகப்பன் நல்ல செயல் செய்திருக்க, தீய செயல்புரியும் மக்கள் உண்டு. தீய செயல் செய்தோன் மக்களில் நல்லனவே புரிவோர் உளர். தகப்பனைக்கொண்டு மகனுக்குப் பெருமை கொடுப்பதானால் நல்லவன் கெட்டவனாகவும் கெட்டவன் நல்லவனாகவும் கொள்ளப்பட்டு விடுவான். பெருமையும் சிறுமையும் தன் செயலைப் பொறுத்ததன்றித் தகப்பன் செயலைப் பொறுத்ததன்று. எனவே பரம்பரை காரணமாக ஜாதி கொள்ளப்பட்டுத் தீண்டத்தகாதார் என வீணாக ஒரு பெருங் கூட்டத்தார் ஒதுக்கப்படுதற்குப் பொருள் சிறிதும் இல்லையென்று எத்துணை முறை வேண்டுமானாலும் அறுதியிட்டு நிரூபிக்க முடியும். நல்லறிவும் நடுவுநிலைமையும் உள்ளார் அம்மூடக் கொள்கையை அடியோடு வெறுப்பர் என்பதில் தடையில்லை. ஆகவே அம்முறையில் பிறப்புப்பற்றித் தீண்டத்தகாதாரில்லை; இல்லை; முக் காலும் இல்லை.


பின்னை, வேறுவகையில் தீண்டத்தகாதாருளரோ? உளர்; உளர்; செயல்பற்றித் தீண்டத்தகாதார் உளர். எவர் இழிந்தசெயல் செய்கின்றாரோ அவர் தீண்டத்தகாதார். இந்நாள் தீண்டத் தகாதாரென்று ஒதுக்கப்படுவோர் பரம்பரை யிருந்த முன்னோரெனக் கொள்வோர் எவைபற்றித் தீண்டத் தகாதாராக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்? புன் புலால் உண்டமையாலும் பொய் புகன்றமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/113&oldid=1325610" இலிருந்து மீள்விக்கப்பட்டது