பக்கம்:குற்றால வளம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

மடமை

 பது மூதுரையன்றோ? இதனை உணரவிடாது தடுப்பது மடமையேயாகும். அநுபவத்தில் பலரைப் பார்க்கிறோம். மனத்துக்கண் மாசிருக்குமானால் அவருக்கு உள்ள அறிவையெல்லாம் மடமையென்ற பாவி விழுங்கி விடுகின்றான். பின்னை அவர் செய்வதில் எச் செயலும் அறிவுடைச்செயலாக விருப்பதில்லை. அது கொண்டன்றோ, தமிழறம் வகுத்த திருவள்ளுவனார் "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்த்றன் ஆகுலநீர பிற" என்றருளினார். மனத்துக்கண் மாசிலனாக இருந்தாலன்றி அவன் செய்யும் எதுவும் நன்றாகாதென்பது கண் கூடாகக்கண்ட உண்மை. உன் மாசு கழுவாத வேடதாரி செய்யும் செயலெல்லாம் மடமை பொருந்தியனவாகவே முடியும்.


இப்பாழும். உலகம் மிகவும் கெட்டதாக விருக்கின்றது. மறஞ்செய்யும் ஒருவனே உலகம் கடிந்து ஒதுக்கும் அறிவு பெற்றிருக்குமானால் யாரும் அது செய்யமாட்டார். பல் இடங்களில் மறம்புரி மறவோர் மதிக்கப்படுவதையும் காண்கின்றோம். எவ்வாறு ? பொய்யைக் சொல்லி ஒருவன் பொருளைச் சம்பாதித்துவிட்டால் அவன் புத்தியுடையவன் என்று புகழப்படுகிறான். அவன் அவ்வாறு பொருள் ஈட்டியதும் மடமை. பிறர் அவனைப் புகழ்வதும் மடமையே. தேடிய பொருள் நிலையிலாதது; கூறிய பொய் நிலைத்து நின்று இவனைக் தொடரும். இவ்வுண்மை அறியாதது மட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/117&oldid=1343548" இலிருந்து மீள்விக்கப்பட்டது