பக்கம்:குற்றால வளம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

மடைமை

 திடமான கொள்கையில்லாமல் சமயத்திற்குக் தக்கபடி உளறிக்கொட்டும் சிலர் இல்லாமல் இல்லை. கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று கடனாற்றும் பலர் இந்நாள் இன்மையினாலேயே எந்த இயக்கமும் வளர்ந்தோங்கவில்லை. இன்று ஒன்றைச் சரி என்று கூறி, நாளை இதனால் தனக்கு ஏதேனும் இடையூறு செய்யக்கூடிய ஒருவர் வந்து நெருக்கினால் "இல்லை; இல்லை; இது சரியல்ல; நீங்கள் சொல்வது நிரம்பச் சரி" என்பாரும் சில மக்கட்குப் பயந்து அவர் தீச்செயலை யெல்லாம் தலையிற் சுமந்து புகழ்ந்து புகழ்ந்து கூறுவாரும் மடமையுடையா ரென்பதில் என்னே ஐயம்?


மடமை உலகத்தில் எல்லையின்றிப் பெருகி விட்டது. எல்லாம் வியாபாரமாகி விட்டது. தனக்கென ஒரு கொள்கையின்றி வருவாயையும் புகழையுமே நாடி எல்லாக் காரியமும் செய்யப்படுகிறது. கள்வர், கயவர், கொடியர், கொலைஞரெல்லாம் பொதுஜன ஊழியரென்று முன்வந்து மக்களை வஞ்சிக்கின்றார். தமது மடமையால் நன்றென எண்ணி மக்கட்குப் பல தீங்குகளை ஆற்றிவிடுகிறார். ஒன்றுமறியாப் பேதைகளெல்லாம் ஜனத் தலைவராக வர விரும்புகிறார் மடமையுள்ளவர் தங்கள் மடமையைத் தாங்களே வைத்துக்கொண்டு அமைகின்றாரில்லை. பின் வார்சுகளும் உண்டாக்கி வருகிறார். வளர்ந்து வந்து பிறப்பின் பேறடையவேண்டிய இளைஞர்களை யெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/119&oldid=1343554" இலிருந்து மீள்விக்கப்பட்டது