பக்கம்:குற்றால வளம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

111


தடுத்துத் தங்கள் மடமையை அவர்கள்பாற் புகுத்திப் பலரைப் பொறாமையும் அறியாமையும் நிரம்பியவர்களாக ஆக்கிவிடுகிறார். அவரும் சிறு மதியால் ஏமாந்து அவற்றைக் கைக்கொண்டு அழிவு தேடிக் கொள்கிறார்.


மடமையால் மூடப்பட்ட இளைஞர்களைக் காணும்பொழுது பெரிதும் வருத்தமாக விருக்கிறது. அந்தோ! மக்களாகப் பிறந்து பேறடைய வேண்டியவர்கள் இளம் வயதிலேயே பொறாமைகொண்ட மடமைப் பாபிகட்கு ஆட்பட்டுத் தங்கள் நலன் இழப்பதைக் கண்டு எவ்வாறு சகிப்பது? எவரும் சார்ந்ததன் வண்ணமாதல் இயல்பு. அதினும் எதனையும் பற்றக் கூடிய இளமைப் பருவத்தில் அவ்வாறாவது முழுதும் நிச்சயம். அதன் பொருட்டே "தீயாரைக் காண்பதும் தீது" என்று செப்பப் பெற்றது.


மடமையால் என்னென்ன வெல்லாம் செய்கின்றார். எண்ணுந்தோறும் எண்ணுத் தோறும் வியப்பாகவே யிருக்கின்றது. ஒருவர் பிறனில் விழைகின்றார்; அத்தவறுதலைக் கண்டித்தால் சீறி விழுகின்றார், ஒருவர் பொய்யையெல்லாம் திரட்டி ஆக்கப்பட்ட ஒரு உருவாகப் பொலிந்து, பொய்யே புகன்று பலரறியப் பொய்யே எழுதிப் பொய்யே செய்கின்றார். அவர் செயல் பொய் என்று கூறினால் புலம்பித் தவிக்கின்றார். சில பொய்யர்களைக் கொண்டு தம் பொய்யை மெய்யென்று புகன்று திரியச் செய்கின்றார். கடவுள் ஒருவர் இருக்கின்றார்; அவருக்கு ஏற்க நடக்க வேண்டுமென்ற எண்ணம் சிறிதும் இருப்பதில்லை. இவ்வுலகத்தினும் எத்தனைநாள் வஞ்சித்து வாழமுடியும்? கடவுளிடத்துக் தண்டனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/120&oldid=1343559" இலிருந்து மீள்விக்கப்பட்டது