பக்கம்:குற்றால வளம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

மடைமை

 பெறுவது நிச்சயம். இவ்வுண்மைகளை அறியாமையே மடமை. உண்மை ஓராது உலகத்தை ஏமாற்றி விட்டோமென் றெண்ணிக் களிப் பெய்துதல் பெருமடமை. இம் மடமை கொண்ட மக்கள் உய்வதரிது.


சதியாலோசனை செய்து உலகை வஞ்சிக்கும். மடமையுடையார் போக, உண்மையிலேயே ஒன்றுமறியாது மடமையொடு வாழ்வாரும் பலர் உண்டு. அவர் மடமை போக்க வேண்டுவது அறிஞர் கடன். வேண்டுமென்றே கெடுவினை புரியும் மடமையைக் கடவுள்தான் போக்குதல் வேண்டும்.


மடமையுடைமையினாலேயே தாம் செய்யும் மடமையின் பாற்பட்ட காரியங்களெல்லாம் அவருக்கு மடமையாகத் தோன்றவில்லை. மடமையை யாரும் எடுத்துக் கூறினால் திருந்த முந்துகின்றாரில்லை. மேலும் மேலும் அவர் செய்யுங் காரியங்களெல்லாம் பெருமடமை யுடையனவாகவேயிருக்கின்றன. மடமையாற் தரம் கெடுவதை உணரும் அறிவை இழந்து விடுகிறார். அது அவர் ஊழ்வினை போலும்! தன் சரித நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்க்கும் அறிவு ஒன்று பெற்றாலும் இவ்வகம்பாவ மடமை யகன்றுவிடுமே. அவர் என் செய்வார்? ஊழ் விடுகின்றதில்லை. அகம் பாவ மடமை அறிவை அழித்துவிடுகிறது. தாமாக அறியாத போதினும் எத்துணை முறை எவர் இடித்துக் கூறினாலும் செவியில் ஏறுவதில்லை. அவர் மனத்தை மாற்றி மடமை போக்க எல்லாம் வல்ல ஈசனாலன்றி வேறு யாரால் முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/121&oldid=1343563" இலிருந்து மீள்விக்கப்பட்டது