பக்கம்:குற்றால வளம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

115

 சமஸ்தானம் அவ்வாறு பெயர்பெற்ற காரணம் என்னவோ? அது நிற்க,


திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகர் திருவனந்தபுரம் என்பது. அந்த சமஸ்தானத்துள் பெரிய ஊர் திருவனந்தபுரமே, அத்திருவனந்தபுரமும் அதனைச் சேர்ந்த அந்த சமஸ்தானத்திலுள்ள எல்லா ஊர்களும் மலைமேலேயே இருக்கின்றனவென்று வழுத்தலாம். திருவனந்தபுரம் ஒரு ஊருக்குள்ளேயே மலையின் இயல்புக்கேற்ப உயரமும் ஆழமும் ஆங்காங்கு மாறி மாறியிருக்கின்றன. அந்த சமஸ்தானம் முழுமையும்-அந்த நாடு முழுதும் மலைகளின் மீது வளைந்து வளைந்து தெருக்கள் வகுக்கப்பட்டு அவைகளின் இடையிடையே ஊர்கள் காணப்பட்டதாகவே இருக்கின்றன.


மக்கள் நல்ல இன்ப வாழ்க்கை வாழ்தற்கு மிகுதியும் ஏற்றது அம்மலைநாடு. அந்நாடு முழுமையும் யாண்டும் வளஞ்செறி மரங்கள் மலிந்து கிடக்கின்றன. யாண்டு நோக்கினும் மலையும் மரமும் செடியும் கொடியும் ஆகிய நற்பொருள்களே. கண்களை எப்பக்கம் புகவிட்ட போதினும் ஒரே பச்சை நிறமே பெருகிக் கண்களை நிறைத்து நிற்கும். மரமும் பச்சை, செடியும் பச்சை, கொடியும் பச்சை, அவற்றை இடையீடின்றி நிரலே பரப்பிக்கொண்டு இலங்கும் மலையும் ஒரே பச்சை. அம்மலை ஏறியும் இறங்கியும் இருக்கும் தன்மை மிக அழகிற்று. மலைகளின் குடுமிகள் இடையறாது தவழ்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/124&oldid=1343991" இலிருந்து மீள்விக்கப்பட்டது