பக்கம்:குற்றால வளம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

117

 தந்த காட்சி இதுவே. இது ஒன்றுகொண்டே எதிர்காலத்தில் இம்மலைநாடு பெரிதும் நாகரிகம் அடைந்துவிடும் என்று நவிலலாம்.


மலைநாட்டுப் பெண்மக்கள் உடை விஷயத்தில் இப்பொழுது திருத்தம் எய்தி வருகிறார் அது கல்வியின் பயனே. ஆண் மக்களைப் போல் பெண்மக்களும் ஒரு வேட்டி கட்டி ஒரு துண்டு மேற்போட்டுக் கொள்தல் என்பது பெருத்த அநாகரிகமன்றோ? பெண்கள் உடற் கூற்றுக்கு அவ் உடை சிறிதும் ஏற்றதாககாது என்பதைக் கல்வி கற்பதன் பயனாலும் பிற நாட்டவர் கூட்டுறவாலும் மலைநாட்டுச் சகோதரிகள் அறிந்து திருத்தம் அடைந்துகொண்டு வருவது போற்றத்தக்கது. நாளடைவில் அவர்கள் உடை விஷயத்தில் நன்னிலையெய்தி விடுவார்கள் என நம்பலாம். இரு பாலாரும் கல்வி கற்றால் எல்லாம் நன்கு திருந்திவிடும். மக்கள் உண்மையில் மக்களாதற்குப் பெருந்துணை புரிவது கல்வி ஒன்றேயன்றோ? அதில் திருவாங்கூர் அரசாங்கம் பாராட்டுதற்குரியதே.


மலைநாட்டார் உலக இயல்பிற்கேற்ப முற்காலத்திற்கு இப்பொழுது வரவர நாகரிகம் பெற்றே வந்திருக்கின்றனர். திருவனந்தபுரம் பொருட்காட்சிச்சாலையில் மலைநாட்டின் பண்டைமக்கள் நிலை அறிதற்குற்ற கருவிகள் பல தொகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் நூல் ஆடையை அறியாது மரவுரி உடுத்தும் வைக்கோற்களைச் சுற்றியும் மலையிற்றிரிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/126&oldid=1343996" இலிருந்து மீள்விக்கப்பட்டது