பக்கம்:குற்றால வளம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

5

 யாடுமிடமாக ஏற்றிருப்பதில் வியப்பொன்றுமில்லை. அதனாலேயே வானம் முட்டும் பெரு மலைகளில் செழுமை மண்டிக் கிடக்கின்றது. அத்தகைய செழுமை பெருகிக்கிடக்கும் இடங்களில் குற்றாலமலைப்பதியும் ஒன்றாம்.

சீதளம் மிகுந்த இடங்களிலேயே நல்மரங்கள் செழித்துக் கொழுத்து ஓங்கி நிற்கும். குற்றால மலையில் வளமலி நன்மரங்களும் செடி கொடிகளும் மிகப்பல. ஜாதிக்காய். கிராம்பு, ஏலம், ஆரஞ்சு, வங்கிஸ்தான், பம்பிளிமாஸ், வாழை, பலா, மா, கொய்யா, தென்னை, கமுகு, சந்தனம், குங்கிலியம், செண்பகம், ரோஸ், முல்லை முதலிய மரங்கள், செடிகள், கொடிகள் குற்றால மா மலையைப் பெரிதும் வளம்படுத்த நிற்கின்றன. பழங்கள் காய்கள் இவற்றின் பருமன் அம் மலைவளமாகிய செழுமையைச் செவ்விதிற் காட்டுகின்றன. அம் மலையிருக்கும் உயிர்ப்பிராணிகளும் மலைவளங் காட்டாம்ல் இல்லை. எல்லாம் செழுமையாகவே பருத்துக் கொழுத்திருக்கின்றன. அம்மலைப் பதியாகிய குற்றாலத்தில் பருவகாலக் துய்த்து வருவார் பலரும் உடல் நலம் பெற்று அம்மலைவளங் காட்டுவது கண் கூடாமானால் பிறிதைப்பற்றிப் பேசுவானேன்?

குற்றால மாமலை தவழ இடங்கொடுத்து, அதன் பயனை நுகர்ந்து, தான் வளமாகி, மரங்களையும் செடிகளையும் உயிர்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/14&oldid=1291372" இலிருந்து மீள்விக்கப்பட்டது