பக்கம்:குற்றால வளம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

குற்றால வளம்


நன்கு செழிக்கச்செய்து, ஆண்டு வரும் மக்கட்கு காற்றையும் அருமை மிக்க நிரையும் உணவுப் பொருள்களையும் உதவிக் கண்ணுக்கும் உடலுக்கும் உயிருக்கும் நல் இன்பம் கொடுத்து ஆட்கொள்ளும் பேற்றை இயற்கையிற் பெற்றுளது. அதிலும் பற்பல இடங்களிலும் காற்றும் நீரும் கடுகளவும் இன்றி வறண்ட கோடை காலத்தில் இம்மலை செய்யும் இப்பேருதவி சிறிதோ!

குற்றாலத்தை விட இன்னும் குளிர் மிகுத்த மலை பலவுண்டு. ஆனால் குற்றாலத்தைப் போல் மக்கள் நீராடுவதற்கென்றே அமைந்த சீரான அழகுடைய அருவிவீழ் மலைப்பதி யாண்டும் இருக்குமா என்பது ஐயமே. குற்றாலத்தில்பலபல பகுதியாகப்பிரிந்து அருவி வீழ்ந்து அப் பகுதியையும் அணித்தாகவுள்ள இடங்களையு ம் பெரிதும் வளம் படுத்தி நிற்கின்றது. மலை உச்சியிலிருந்து அவ் அருவிதோன்றிவருகிறது. உச்சி மலையில் மேகத்தால் பெய்யப்பட்ட நீரே மலையில் ஆறாக ஓடி வந்து கீழ்த்தரைவரை வந்து அருவியாக வீழ்ந்து நதியாக ஓடுகின்றது. இவ் வருவித் தொடக்கம் யாண்டு என்பதை பார்க்கக் கூடலில்லையெனினும் மலைமீது சில தூரம் சென்று காணமுடிகிறது. மலை, ஏறியும் இறங்கியும் மாறி மாறி இருப்பதால் மலைமீது பற் பல இடங்களில் அருவி வீழ்கின்றது. அதிற் சில இடங்களில் மிக அதிகமாகக் கொட்டுகின்றது. அவ்விடங்களில் சில பெயர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/15&oldid=1291378" இலிருந்து மீள்விக்கப்பட்டது