பக்கம்:குற்றால வளம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

7


வ்வருவிகட்குப் பேசப்படுகின்றன. இப் பொழுது மக்கள் கண்ணுக் கெட்டுவதில் எல்லாவற்றிற்கும் உயரமாக விழும் அருவியைத் தேனருவியென அழைக்கின்றனர். அதற்குக் காரணம் உண்டு. இன்றும் ஆண்டுத் தேன் கூடுகள் நிறைய இருக்கின்றன. அதற்குச் சிறிது கீழாக ஒரருவி வீழ்கின்றது. அது இப் பொழுது செண்பகதேவி அருவி எனச் சொல்லப்படுகிறது. ஆண்டுச் செண்பகதேவி என்ற ஒரு அம்பிகையும் காணப்படுகின்றது. இவ் விடத்தைச் செண்பக அடவி என முன்னர் செப்பியதாகத் தெரிகிறது. செண்பக மரங்கள் அன்று ஆண்டு மல்கியிருந்திருக்கும் போலும்! எல்லாவற்றிற்கும் கீழே தரையில் வீழ்வதை வட வருவி என்று வழுத்துகிறார். அது திக்கு நோக்கிப் போலும்! அன்றி அது பெரிய அருவியென்றும் பேசப்படுகிறது. அது அளவு நோக்கி. இன்னும் சிற்றருவி என்று ஒன்று வீழ்கின்றது. அது பெரியதை நோக்கி, ஐந்தருவி என்று ஒரிடத்திருக்கின்றது. அது ஒரே இடத்தில் ஐந்தாகப் பிரிந்து வீழ்வதாகக் கொண்டு. குற்றாலத்தில் அருவிக்காட்சி பெரிதும் அருமையானது. சிறு சாரல் வீழ்ச்சி உவக்கத்தக்கது. குற்றால வளம், அறிஞர் அறிவை-புலவர் உள்ளத்தைப் பெரிதும் ஈர்ப்பது. குற்றால வளம்பற்றி இயற்கைப் புலவர் பெருமான் திருஞான சம்பந்தர் செப்பிய சில இயற்தை அழகுப் பாட்டுகளின் வரிகளை இங்கு அநுபவிப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/16&oldid=1291385" இலிருந்து மீள்விக்கப்பட்டது