பக்கம்:குற்றால வளம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தெய்வத்தன்மை

 அவன் உயரிய செயல் உடையான் என்பதே பொருள். அன்றிக் தெய்வத் தன்மைக்குப் பிறவியும் பிறவும் காரணமன்று. எல்லாவற்றிற்கும் செயலே காரணம். "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கரும்மே கட்டளைக்கல்." .


மக்கள் பலர் இவ் உண்மை ஓராது மயக்கங் கொள்கின்றனர். தெய்வத்தன்மை யென்பது, யாண்டோ வானத்திலிருந்து கொணரத் தக்க ஒரு பொருளென்று கருதுகின்றனர். அது, தங்கட்கு எந்நாளும் கிட்டாதென எண்ணுகின்றனர். தெய்வத்தன்மையின் உண்மையை நன்கு ஆராயும் அறிவுபெறார், அதை ஒருநாளும் அடையப்போவதில்லை யென்பது உறுதிதான். அவ்வுண்மையை உணர்தல் வேண்டும். தெய்வத்தன்மை யென்பதை எல்லோர்க்கும்பெற உரிமை உண்டு. முயன்றால் அது நிச்சயமாகக் கிடைக்கும். பிறக்கும் பொழுதே தெய்வத்தன்மையோடு கூடப்பிறந்தாலன்றி அது கிட்டாதென்பது பிழை. செயல், என்று உயரியதாகிறதோ அன்று அச்செயல் வல்லார் தெய்வத்தன்மை பெற்றவராகிறார்.


தெய்வத்தன்மையின் மெய்ப் பொருள் அறியாமையாலேயே, மக்கள் அத்தன்மைக்கும் தங்கட்கும் தொடர்பு இல்லையென மயங்கி இடர்ப்பட்டுழல்கின்றார். அதனாலேயே தெய்வத்தன்மை பெற்றவராக முடியாமல் பலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/19&oldid=1291619" இலிருந்து மீள்விக்கப்பட்டது