பக்கம்:குற்றால வளம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

11


மாண்டுபடுகின்றார். இந்நாள் நம் காட்டில் கற்ற வகுப்பார் என்று கழறப் பெறுபவர்கூட, தெய்வத்தன்மை இன்னதென அறியாது தியங்கியழிகின்றார். ஈண்டுக் கற்றவர் என்பதற்குப் பொருள் அறிவாளர் என்றுகொள்ள முடியவில்லை. நம் நாட்டுக் கல்விக்கும் மெய்யறிவிற்கும் தொடர்பில்லை. "கல்வியும் அறிவும்" என்ற கட்டுரையில் அதைக் காணலாம்.


தெய்வத்தன்மை யென்பது பிறவியிலேயே அமையும் ஒன்று என நம்மவருள் கற்றாரும் மற்றாரும் ஆகிய பலர் கருதுகின்றார். அது, இக் காலத்துப் பிறந்தாருள் யாருக்கும் இல்லையென்றும் அவர் நினைக்கின்றார். பழைய நாள் பிறந்தாருள் அத்தன்மை பெற்றிருந்தார் பலர் உளர் என்றும் அவருக்கு ஈடாவார் இந்நாள் இலர் என்றும் இருக்கமுடியாதென்றும் அன்னார் அறைகின்றார். இது எத்துணைப் பெரும் மூடக் கொள்கை. அன்றியும் தெய்வத் தன்மை பொருந்தியவர் என்பதற்குச் சிற்சில இலக்கணங்கள் செப்புகின்றனர். யோனி வாய்ப் பிறவாதாரே தெய்வத்த்ன்ன்மயுடையார் என்று ஒரு கூட்டத்தார் கூறுவர். அவர், தாம் தெய்வத்தன்மை யுடையாரென்று செப்புகின்ற சிலர் யோனிவாய்ப்பிறவாதார் என்று சரிதங்கள் எழுதிவைப்பர். அநுபவத்தில் யோனிவாய்ப் பிறவாதார் எவரையும் இந்நாள் நாம் கண்டேமில்லை. நடைமுறையில் அவருண்மையைக் காட்டமுடியாமையாலேயே இந்நாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/20&oldid=1291621" இலிருந்து மீள்விக்கப்பட்டது