பக்கம்:குற்றால வளம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தெய்வத்தன்மை


அவ்வாறு மெய்ச்செயல் கொண்டு ஒப்பு நோக்குவோமானால் பண்டிருந்த பல்லோரையும் விட இன்றிருக்கும் எல்லோரையும் காட்டிலும் செய்கையிற் சிறந்த-தெய்வத்தன்மை வாய்ந்த-உலகிற் பெரியாரென்று உரைக்கப் பட்ட ஒருவர், இன்று இப்பரந்த பேருலகில் விளங்குவது காணலாம். சமயக்கணக்கர்கள், அவசரப்படாது நடுநிலையோடு எல்லாத் தெய்வதன்மையும் வாய்ந்தவர்களாகத் தாங்கள கொள்ளும் சமயாச் சாரியார்கள் மெய்ச் சரிதங்களை வைத்துக்கொண்டு, நான் மேலே கூறிய இன்று இவ் உலகில் வாழும் காந்தியடிகள் சரிதத்தையும் வைத்து தாய்தல் உவத்தல் இன்றி நோக்கினால் உண்மை அறியலாம்.


உண்மைத் தன்மை யறியாது பழைய காலத்திற்கே பொய்ப்பெருமை கொடுத்தல் முன்னேற்றத்தைப் பெரிதும் தகைவதாகும் காந்தியடிகளே யாயினும் அவர் செய்த தவறு தவறே யன்றிச் சரியாகாது. அடிகள் கூறும் தற்சரிதத்தை அன்பர்கள் படித்திருக்கலாம். அச்சரிதத்தில் அவர்கள் முன்னே செய்த தாழ்ந்த செயல்களையெல்லாம் கூறியிருக்கின்றார்கள். அச்செயல்கள் அவர்கள் செய்ததற்காக உயர்வு பெற்றுவிடுமா? என்றும் எங்கும் எவர் செய்தபோதினும் தாழ்வு தாழ்வே; உயர்வு உயர்வே. செய்வோரைப் பொறுத்துச் செயல் மாறாது. காந்தியடிகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/25&oldid=1292310" இலிருந்து மீள்விக்கப்பட்டது