பக்கம்:குற்றால வளம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

17


அன்று தாழ்ந்த செயல் சில செய்தார்கள்; இன்று உயர்ந்த செயலே செய்கிறார்கள். அவ்ர்கள் அன்று செய்த அச்செயல் வேறு தன்மையது; இன்று செய்யும் செயல் தெய்வத் தன்மையது; அங்நிலையிலிருந்தோரும் இந்நிலையடைய முடியும் என்ற உண்மையை அடிகள் காதை காட்டுகின்றது. எனவே,


தெய்வத்தன்மைக்குரிய செயல் செய்வதற்கு அவன் பிறவியிலேயே தனிப் பிறப்பாகப் பிறக்க வேண்டுமென்பதில்லை. தெய்வத் தன்மைக்குரிய உயரிய செயலை என்று செய்கின்றனோ அன்றே அவன் தெய்வத்தன்மையுடையவனாகின்றான். ஆகலின் "தெய்வத்தன்மையடைய நம்மால் முடியாதே; நாம் அவ் வாறு பிறக்கவில்லையே” என்று எவரும் கவலைப்பட வேண்டுவதில்லை. தெய்வத் தன்மைக்குரிய செயல் செய்யும் அறிவு பெற்றுத் தெய்வத்தன்மை யுடையவராக முயலலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/26&oldid=1292320" இலிருந்து மீள்விக்கப்பட்டது